ஈரான் அநியாயமா பொய் சொல்கிறது.. ஹார்முஸ்-ல் நடப்பது நாடகம்.. டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு!

ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வரும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பெரும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது ஈரானின் IRGC படைகள்.

உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் சப்ளை இல்லாமல் குறிப்பாக அமெரிக்கா திண்டாடி வரும் வேளையில் இதை மேலும் மோசமாக்கும் முயற்சியில் ஈரான் இறங்கியுள்ளது.

ஈரான் அநியாயமா பொய் சொல்கிறது.. ஹார்முஸ்-ல் நடப்பது நாடகம்.. டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு!

பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான போர் துவங்கியதில் இருந்து எப்போதும் செய்திடாத வகையில் ஹார்முஸ் வழித்தடத்தில் ஓரே நாளில் 7 கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான்.

மீண்டும் போர் வெடிக்கும் முன்பு ஹார்முஸ்-ஐ விட்டு லோடு செய்யப்பட்ட கப்பல்கள் எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்ற இலக்குடன் கிளம்பிய எண்ணெய் கப்பல்கள், அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் ஒமான் நாட்டின் வழித்தடத்தைத் தேர்வு செய்ததில் 7 கப்பல்கள் தாக்குதலை எதிர்கொண்டது.

இதுகுறித்து ஈரானின் IRGC படைகள் வெளியிட்ட அறிக்கையில் நேற்று நடத்த 7 கப்பல் விபத்தில் 4 கப்பல்கள் எண்ணெய்யை டிரான்ஸ்பர் செய்துகொண்டு இருந்த போது தாக்கப்பட்டு விடிய விடிய எரிந்தது. மற்ற 3 எண்ணெய் கப்பல்கள் நாங்கள் ஏற்கனவே வைத்த கடல் கண்ணி வெடிகள் மூலம் பாதிப்புக்குள்ளாகி ஹார்முஸ்-ல் முடங்கியது என விளக்கம் கொடுத்தது.

ஒரே நாளில் 7 கப்பல் ஹார்முஸ்-ல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து டிரம்ப் பேசுகையில், அமெரிக்காவில் மிட்டேர்ம் தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில் கச்சா எண்ணெய் விலையைத் திட்டமிட்டு உயர்த்த 7 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகப் பொய்யான தகவல்களைப் பரப்பி ஈரான் நாடகமாடி வருகிறது என தெரிவித்தார்.

மேலும் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் டிரம்ப் ஈரான் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 75000 பேரைக் கடந்த 7 மாதத்தில் கொன்ற நாடு எனக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஈரான் எப்போது அணு ஆயுதத்தை பயன்படுத்தாது, பயன்படுத்தவும் விடமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் ஈரான் தரப்பில் முக்கியமான குற்றச்சாட்டு வைத்துள்ளது, கடல் கண்ணி வெடி வைக்கப்பட்டு உள்ளதாக நாங்கள் ஏற்கனவே எச்சரித்தும் அமெரிக்கா தான் எண்ணெய் கப்பல்களை இவ்வழித்தடத்தில் செல்ல ஊக்குவித்தது. இதன் வாயிலாகவே நேற்று 3 எண்ணெய் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானது எனத் தெரிவித்தது.

இதேவேளையில் வளைகுடாவில் பெரும் போர் வெடிக்கும் என்ற அச்சம் இருக்கும் காரணத்தால் அமெரிக்க அரசு இப்பகுதியில் இருக்கும் தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பங்கள், முக்கிய நிர்வாக அதிகாரிகள், அமெரிக்க ஊழியர்கள் எனப் பலரைப் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப உத்தரவிட்டு உள்ளது.

இந்த பதற்றத்தின் வாயிலாக பியூச்சர்ஸ் எண்ணெய் சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 0.81 சதவீதம் அதிகரித்து ஒரு பேரல் 100.3 டாலராக உள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.65 சதவீதம் உயர்ந்து 113.9 டாலராக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+