இஸ்ரேல் - ஈரான் மோதலில் இந்தியாவுக்கு நடக்கும் ஒரு நல்ல விஷயம்ன்னா.. அது இதுதான்..!!

இஸ்ரேல் - ஈரான் மத்தியிலான தாக்குதல் துவங்கியதில் இருந்து அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்டு உள்ள தடுமாற்றம் இந்திய முதலீட்டுச் சந்தையை அதிகம் பாதித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் நாட்டுடன் இந்தியாவுக்கான வர்த்தக உறவு சிறப்பாக இருந்தாலும், அதிகளவில் நம்பியிருக்கும் நிலை இல்லை.

இஸ்ரேல் நாட்டில் இருந்து இந்தியா சில தொழில்நுட்ப சேவைகளையும், சில விவசாய பொருட்களை வாங்குகிறது. இதேபோல் ஈரான் நாட்டில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இவை அனைத்திற்குமே இந்தியாவுக்கு மாற்றுச் சந்தைகள் உள்ளதால் இந்த போர் தாக்குதல் காரணமாக இந்தியாவுக்கான நேரடி பாதிப்புகள் மிகவும் குறைவு தான். ஆனால் சர்வதேசச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களின் வாயிலாக கொலட்டரல் டேமேஜ் ஆக இந்தியா பாதிக்கப்படுகிறது.

இஸ்ரேல் - ஈரான் மோதலில் இந்தியாவுக்கு நடக்கும் ஒரு நல்ல விஷயம்ன்னா.. அது இதுதான்..!!

ஆனால் இந்த இக்கட்டான நேரத்திலும் இஸ்ரேல் - ஈரான் மத்தியிலான தாக்குதல் மூலம் இந்தியாவுக்குச் சாதகமான வர்த்தக வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். அது எந்த துறையில்..? யாருக்கு அதிக லாபம்..?

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால், இந்தியாவிலிருந்து வெட்டி - பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் (CPD) ஏற்றுமதிக்குச் சாதகமான சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. இஸ்ரேலில் இருந்து சர்வதேச சந்தைக்கு வரும் வைரங்கள் இந்த தாக்குதல் காரணமாகப் பாதிக்கப்படும் என்பதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் சர்வதேசச் சந்தை வர்த்தகத்தைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய வைர சந்தையில் இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகியவை முக்கிய சப்ளையர்களாக இருக்கும் வேளையில், இஸ்ரேலின் பாதிப்பு இந்தியாவுக்கு மிகவும் சாதகமாக மாறியுள்ளது. இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டில் இருந்து அதிகம் வைரம் இறக்குமதி செய்யும் நாடுகளாக அமெரிக்காவும் மற்றும் சீனாவும் உள்ளது.

இஸ்ரேல் - ஈரான் மோதலில் இந்தியாவுக்கு நடக்கும் ஒரு நல்ல விஷயம்ன்னா.. அது இதுதான்..!!

ரஷ்யாவின் வைர சப்ளை குறைந்த காரணத்தால் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் இயங்கும் வைர தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இப்படியிருக்கும் வேளையில் இஸ்ரேல் - ஈரான் போர் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.

இதேநேரத்தில் இஸ்ரேலில் இருந்து இந்தியாவுக்கு வரும் வெட்டப்பட்ட வைரங்களின் விநியோகத்தையும் பாதிக்கும், ஆனால் இதை பிற சந்தையில் இருந்து இறக்குமதி செய்வது மூலம் பிரச்சனையைச் செய்ய முடியும்.

இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், இஸ்ரேலின் வைர ஏற்றுமதி சுமார் 33% அளவில் குறைந்துள்ளது, இதற்கு முக்கியமான காரணம் காசா தாக்குதல். தற்போது ஈரான் - லெபனான் தாக்குதல் மூலம் இஸ்ரேல் நாட்டின் புவிசார் அரசியல் பதற்றம் நீடிக்கும் காரணத்தால் வைரம் சப்ளை கூடுதலாகப் பாதிக்கப்படும்.

இதே நேரத்தில், இந்தியாவின் வெட்டப்பட்டு பாலிஷ் செய்யப்பட்ட வைர ஏற்றுமதி அதே காலத்தில் 20% குறைந்து, சுமார் 5.62 பில்லியன் டாலராக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் வைரங்களின் இருப்பு பாதித்துள்ளது தான்.

ஜெம் & ஜூவல்லரி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலின் தலைவர் விபுல் ஷா இதுக்குறித்து கூறுகையில், இஸ்ரேலில் இருந்து உலகளாவிய சந்தைக்கு வரும் வெட்டி - பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களின் விநியோகம் குறைவதால் இந்தியாவுக்கு இது முக்கிய வர்த்தக வாய்ப்பாக இருக்கும் என்று தான் நம்புவதாகக் கூறுகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+