தங்கம் விலை உச்சம்..கச்சா எண்ணெய் விலை உயர்வு, பங்குச்சந்தை வீழ்ச்சி –மோசமான வெள்ளியாக மாறிய ஜூன் 13..

சென்னை : இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளை பதம் பார்த்திருக்கிறது. இந்திய பங்குச் சந்தைகள் பெரிய சரிவை சந்தித்திருக்கின்றன. கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் பத்து சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருக்கிறது .தங்கத்தின் விலை உச்சத்தை எட்டி இருக்கிறது.

அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றத்தை உண்டாகி இருக்கிறது. சர்வதேச அளவில் இதன் தாக்கம் பெரிய அளவில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது.

தங்கம் விலை உச்சம்..கச்சா எண்ணெய் விலை உயர்வு,பங்குச்சந்தை வீழ்ச்சி –மோசமான வெள்ளியாக மாறிய ஜூன் 13

மோசமான நாள்: இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் இந்தியாவிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன, தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இப்படி அடுத்தடுத்து எதிர்மறையான தாக்கங்களையே இந்த மோதல்கள் ஏற்படுத்தி இருக்கின்றன.

பாதுகாப்பு படை தலைவர் இறப்பு: ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஈரான் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறது இஸ்ரேல். ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை தடுக்கும் பொருட்டு இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக இஸ்ரேல் தரப்பில் சொல்லப்படுகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு படை தலைவர் கொல்லப்பட்டு இருக்கிறார். இதன் காரணமாக ஈரான் பெரிய அளவில் கோபம் அடைந்திருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை 13% உயர்வு: இந்த மோதல் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 13 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 78.50 டாலர்கள் என அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி 27ஆம் தேதிக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் இவ்வளவு உயர்வது இதுவே முதல் முறையாகும்.

பெட்ரோல் விலை உயர வாய்ப்பு: இந்த மோதல் போக்கு நீடித்தால் கச்சா எண்ணெய் விலை 120 டாலர்கள் வரை செல்ல கூடும் என ஜே பி மார்கன் நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வது இந்தியாவிற்கு நல்ல செய்தி கிடையாது. ஏனெனில் கச்சா எண்ணெய் விலை ஏறினால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும். இது சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கும்.

தங்கத்தின் விலை உச்சம்: முதலீட்டாளர்கள் இந்த போர் பதற்றம் காரணமாக பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில் அதிக முதலீடு செய்வதற்கு முன் வந்துள்ளனர். இதன் காரணமாக எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை கடந்து வர்த்தகமாக இருக்கிறது. சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. அதாவது 86 ரூபாயை கடந்துவிட்டது.

தங்கம் விலை இப்படியே இருக்குமா?: அகமதாபாத் விமான விபத்து, இஸ்ரேல் ஈரான் மோதல் ,கச்சா எண்ணெய் விலை ஏற்றம் ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது என ஜியோஜித் முதலீட்டு நிறுவனத்தின் தலைமை ஆய்வாளராக இருக்கக்கூடிய விஜயகுமார் தெரிவித்திருக்கிறார் . ஈரான் இஸ்ரேல் மோதல் நீடிக்கும் வரை தங்கத்தின் விலை உச்சத்திலே தான் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பங்குச்சந்தைகள் வீழ்ச்சி: இந்த மோதல் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், பெயிண்ட் மற்றும் டயர் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகள் பாதிக்கப்படும் என விஜயகுமார் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார். முன்னதாக இஸ்ரேல் ஈரான் மோதல் காரணமாக இந்திய பங்குச்சந்தையும் வீழ்ச்சி அடைந்தது. சென்செக்ஸ் 1100 புள்ளி வரை காலை வர்த்தகத்தில் சரிந்தது. நிஃப்டி 24,500 புள்ளிகளுக்கும் கீழ் சென்று வர்த்தகமானது. பங்குச்சந்தைகள் காலையில் சரிவடைந்து பின்னர் மேலே எழ தொடங்கின ஆனாலும் பெரிய அளவு மேலே வர முடியவில்லை. வர்த்தகம் முடியும் போது நிஃப்டி 24,736 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 81,118 புள்ளிகளிலும் இருந்தன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+