எங்கள் தோல்விக்கு ஈரானும், இஸ்ரேலும் தான் காரணம்.. வெளிப்படையாக அறிவித்த ஜேடி வான்ஸ்.. டிரம்ப் கதறல்..!!

அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலில் இரு அவைகளிலும் பெரும் தோல்வி அடைந்துள்ளது குடியரசு கட்சியினர் பெரும் சோகத்தில் உள்ளனர், 2024 அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றியைச் சந்தித்த இதே கட்சி 2 வருடத்தில் மக்களிடம் செல்வாக்கையும், நம்பிக்கையையும் இழந்து மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் துணை அதிபரும், குடியரசு கட்சியின் முக்கிய முகமாக இருக்கும் ஜேடி வான்ஸ் டிவிட்டரில் தங்களுடைய தோல்விக்கான காரணத்தை நீண்ட நெடிய பதிவாக வெளியிட்டு உள்ளார்.

எங்கள் தோல்விக்கு ஈரானும், இஸ்ரேலும் தான் காரணம்.. வெளிப்படையாக அறிவித்த ஜேடி வான்ஸ்.. டிரம்ப் கதறல்..!!

2024 அதிபர் தேர்தலில் எங்களுக்கு அதிகப்படியான வாக்குகளைச் செலுத்தி அரியாசனத்தில் உட்கார வைத்த பலர் மிட்டேர்ம் தேர்தலில் எங்களுக்கு எதிராக வாக்கு அளிக்க மிக முக்கியமான காரணம் எங்களுடைய நிர்வாகத்தின் கொள்கைகளும், முடிவுகளும் தான் எனத் தெரிவித்தார்.

இந்த எங்களுடைய தோல்விக்கு 4 காரணங்கள் உள்ளது என ஜேடி வான்ஸ் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

1. ஈரான் உடன் போர் தொடுத்தது.
2. இஸ்ரேல் உடனான அமெரிக்க அரசின் நடப்புறவில் ஏற்பட்ட மாற்றம்
3. மக்களின் வாழ்வியல் மற்றும் பணவீக்கம் உயர்வைக் கவனிக்காதது
4. America First என்ற கொள்கையில் இருந்து விலகியது ஆகியவை தான் இந்த தோல்விக்கு மிக முக்கியமான காரணம் என வெளிப்படையாக ஜேடி வான்ஸ் தனது பதிவில் தெரிவித்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த தேர்தலில் குடியரசு கட்சி ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்குகளைச் செலுத்தவில்லை என்றும், 2024ல் குடியரசு கட்சிக்கு ஆதரவு அளித்தவர்கள் சிறிய எண்ணிக்கையில் பின்வாங்கியதே இந்த தோல்விக்கு காரணம் என குடியரசு கட்சியின் டேட்டா அனலிஸ்ட்-கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மிட்டேர்ம் தேர்தலில் குடியரசு கட்சி பெரியளவில் தோல்வியைச் சந்திக்கும் என முன்கூட்டியே இக்கட்சிக்குள்ளேயே கணிக்கப்பட்ட நிலையில் தற்போது உறுதியாகியுள்ளது.

மிட்டேர்ம் தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு ஃபாக்ஸ் செய்தி சேனலுக்கு அளித்த டெலிபோன் இன்டர்வியூவில் டிரம்ப், இந்த தேர்தல் முடிவுகள் தனது செயல்பாட்டின் மீதான மக்களின் தீர்ப்பு அல்ல என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பொருளாதாரம், ஆட்சி முறை என அனைத்திலும் தனது ஆட்சியின் கடந்த 2 ஆண்டுகள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது எனக் கூறினார்.

அதேபோல் ஈரான் உடனான போர் தொடுத்ததும் குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் என தான் ஒப்புக்கொள்வதாக டிரம்ப் தெரிவித்தார். முக்கியமாக இந்த தேர்தலில் தான் போட்டியிடாத நிலையில், வாக்காளர்களை முழுமையாகக் கட்சியும், கட்சியின் பிரதிநிதிகளும் ஈர்க்க தவறவிட்டது எனவும் குற்றம்சாட்டினார்.

இறுதியில் இஸ்ரேலின் நட்பும், இஸ்ரேல் பரிந்துரைப்படி ஈரான் மீது தாக்குதல் நடத்தியதும் தான் டிரம்ப்-ன் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் அல்ல இஸ்ரேலிலும் ஈரான் உடனான போர் தான் இஸ்ரேல் இரு யூத கட்சிகளும் ஆட்சியை பிடிக்க முடியாத ஒரு தற்காலிக அரசாக நிற்கிறது. பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும், டிரம்பு-க்கும் இது முக்கிய பாடமாக அமைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+