மத்திய கிழக்கு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஈரான் நாட்டின் தலைவர் அயதுல்லா அலி காமெனி தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் மூத்த அதிகாரிகள் தகவல் பெற்றுள்ளதாக The Jerusalem Post செய்தி வெளியிட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவிலும் அலி கமேனி இறந்துள்ளதாக உறுதி செய்துள்ளார். இந்த தகவல் சர்வதேச ஊடகங்களில் வேகமாக பரவி, உலக அரசியல் தளத்தில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

அலி கமேனி உடல் கண்டெடுப்பு
இஸ்ரேல் தரப்பில் இருந்து வெளியான தகவல் படி, அந்நாட்டின் ராணுவ தாக்குதலுக்குப் பிறகு இடிந்த கட்டிட இடிபாடுகளின் கீழ் கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், இது குறித்து மூத்த இஸ்ரேல் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் மூத்த அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவல் படி , "ஈரான் நாட்டின் தலைவர் உயிரிழந்துள்ளார்; அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரான் தரப்பில் பதில்
இத்தகைய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஈரான் அரசு இதுவரை கமேனியின் நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்பாட்டையும் வெளியிடவில்லை. இதனால் உலக நாடுகள் மத்தியில் பெரும் குழப்பமும், அச்சமும் நிலவுகிறது. முன்பு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, "ஈரான் உச்சத் தலைவர் உயிருடன் இல்லாமல் இருக்கலாம்" என்று கூறியிருந்தாலும், அவர் நேரடியாக மரணத்தை உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் தற்போது அலி கமேனி உடல் மீட்கப்பட்டுள்ளது, புகைப்படங்கள் பெஞ்சமின் நெத்தன்யாகு மற்றும் டிரம்ப்-க்கு பகிரப்பட்டு உள்ளது போன்ற தகவல் வெளியாகியுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் பதிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், கமேனி உயிரிழந்துள்ளதாக கடுமையான வார்த்தைகளில் குறிப்பிட்டார். "இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்கர்களுக்கும் உலகின் பல நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கிடைத்துள்ளது" என்று அவர் தெரிவித்தார். மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய துல்லியமான உளவுத்துறை கண்காணிப்பு மற்றும் தாக்குதலால் கமேனி உள்ளிட்ட தலைவர்கள் தப்ப முடியவில்லை என்றும் கூறினார்.
ட்ரம்ப் தனது பதிவில், ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC), ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள பலர் இனி போராட விரும்பவில்லை என்றும், அமெரிக்காவிடம் பாதுகாப்பு உத்தரவாதம் நாடுவதாகவும் தெரிவித்துள்ளார். "இப்போது அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்; பின்னர் மரணம் மட்டுமே அவர்களுக்கு மிஞ்சும்" என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். மேலும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநிறுத்தும் வரை தாக்குதல்கள் தொடரும் என்றும் கூறினார்.

அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்த தாக்குதல்?
Wion News வெளியிட்ட தகவலின்படி, தெஹ்ரானில் நடைபெற்ற கூட்டு அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பின் அலி கமேனியின் உடல் புகைப்படம் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகுவுக்கு காட்டப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவல் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மத்திய கிழக்கு அரசியலில் பெரிய திருப்பமா?
இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டால், அது மத்திய கிழக்கு அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பமாக அமையும். ஈரானின் தலைவர் பதவியில் மாற்றம் ஏற்பட்டால், அந்த நாட்டின் உள்நாட்டு அரசியல், பிராந்திய பாதுகாப்பு, அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் உறவுகள் உள்ளிட்ட பல துறைகளில் அதிரடி மாற்றங்கள் நிகழலாம்.
More From GoodReturns

டிரம்ப்-ன் ராஜதந்திரம்.. ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் குட்நியூஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!!

தீவிரமடையும் ஈரான் போர்: ஓமன் வளைகுடாவுக்கு போர் கப்பல்களை அனுப்பும் இந்தியா!! அடுத்தது என்ன?

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்

துபாயில் ரம்ஜான் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு; ஈரான் போர் நீடிப்பதால் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஈரான் போர்: டிரம்புக்கு குட்டு வைத்த நட்பு நாடுகள்; எங்கள கேட்டா போர் தொடுத்தீங்க என கேள்வி!!

இனி சிலிண்டர் புக் செய்து காத்திருக்க வேண்டாம்!! வந்துவிட்டது LPG ATM..!! 2 நிமிஷத்துல சிலிண்டர்..!!

அமெரிக்காவில் ஈரானின் Sleeper cell-களா? பாரசீக மொழியில் பறந்த மெசேஜ்.. உளவுத்துறையினர் அதிர்ச்சி..!!

கதறி கதறி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போரின் கோரமுகம் இந்தியாவில் எதிரொலி..!!

முதல்ல LPG சிலிண்டரை சரண்டர் செய்யவும்.. அரசின் உத்தரவால் அதிர்ச்சி.. யாருக்கெல்லாம் சிக்கல்..?!

ஈரான் போரில் முக்கிய திருப்பம்: பாதுகாப்பு படை தலைவர் கொலை.. நூலிழையில் உயிர் தப்பிய கமேனி மகன்!!

துபாய், அபுதாபி ஹோட்டல்களில் 70% தள்ளுபடி.. வெளிநாட்டு பயணிகள் வராத காரணத்தால்.. புது ஐடியா..!!



Click it and Unblock the Notifications