உலகின் மிகப்பெரிய மருத்துவ உபகரண நிறுவனங்களில் ஒன்றான Stryker-ன் உலகளாவிய நெட்வொர்க் பெரும் சைபர் தாக்குதலால் முடங்கியுள்ளது. ஈரான் தொடர்புடைய ஹேக்கர் குழுவான Handala இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. "இது சைபர் போரின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம்" என்று அது எச்சரித்துள்ளது.
இந்த சைபர் தாக்குதல் மூலம் Stryker நிறுவனத்தின் நொட்வொர்க்-ல் இருந்து சுமார் 50 டெராபைட் தரவுகள் திருடப்பட்டுள்ளதாகவும், அது "உலக மக்களின் கைகளில்" உள்ளது என்றும் ஹந்தாலா கூறியுள்ளது.

இந்த தாக்குதல் அமெரிக்கா-இஸ்ரேல் போரின் முதல் நாளில் ஈரானின் தெற்கு நகரமான மினாப்பில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்று தாக்கப்பட்டதற்கு பதிலடியாக நடத்தப்பட்டதாக ஹந்தாலா தெரிவித்துள்ளது. அந்த தாக்குதலில் 170க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலில் இறந்தவர்கள் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவிகள் என்று ஈரான் கூறியுள்ளது. மேலும இன்று வெளியான அறிவிப்பில் "அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான, தொடர்புடைய பொருளாதார மையங்கள் மற்றும் வங்கிகளை தாக்குவோம்" என்று IRGC-அன்பியா தலைமையகம் எச்சரித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா மத்தியிலான போரில் ஸ்ட்ரைக்கர் நிறுவனம் மீதான தாக்குதல் சைபர் போரின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்றும் எச்சரித்துள்ளது.

இந்த சைபர் அட்டாக் குறித்து ஸ்ட்ரைக்கர் நிறுவனம் தனது அறிக்கையில், "சைபர் தாக்குதல் காரணமாக மைக்ரோசாப்ட் என்விரான்மென்ட்-ல் உலகளாவிய நெட்வொர்க் தடை ஏற்பட்டுள்ளது. இந்த சைபர் தாக்குதல் மூலம் ரான்சம்வேர் அல்லது மால்வேர் இல்லை என்று நம்புகிறோம். சைபர் தாக்குதல் பின்பு நிறுவனத்தின் தளம் கட்டுப்பாட்டில் உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
ஹந்தாலா சமீப வாரங்களில் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நிறுவனங்கள் மீது தொடர்ந்து சைபர் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஜெருசலேம் பாதுகாப்பு கேமராக்களுக்கு "முழு கட்டுப்பாட்டில்" உள்ளது என்றும் கூறியுள்ளது.
ஈரான் தொடர்புடைய ஹேக்கர் குழு அமெரிக்க ஸ்ட்ரைக்கர் நிறுவனத்தை சைபர் தாக்குதலால் முடக்கியுள்ளது. 50 டெராபைட் தரவு திருடப்பட்டுள்ளது டெக் துறையில் புதிய போர் துவங்கியிருப்பதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications