ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும், ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக கூறி வருகிறார். இன்று கூட அமெரிக்கா ஈரானின் நம்பகத்தன்மை வாய்ந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என அறிவித்தார்.
டிரம்பின் இந்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை சரிந்து பங்குச்சந்தை உயர தொடங்கிவிட்டன, தங்கம் , வெள்ளி விலைகளும் உயர்ந்தன. ஒருவழியாக ஈரான் போர் முடிவை நோக்கி செல்கிறது என பல்வேறு நாடுகளின் மக்களும் சற்றே நிம்மதி அடைந்தனர். ஆனால் ஈரான் நாட்டு ராணுவம் இதில் குண்டை தூக்கி போட்டுள்ளது.

டிரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறும் நிலையில் அப்படி எதுவும் நடக்கவே இல்லை என ஈரான் ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது உலக அளவில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டிரம்ப் கூறுவது உண்மையா அல்லது ஈரான் சொல்வது உண்மையா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது.
திங்கட்கிழமை அன்று ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் பேச்சுவார்த்தை நடந்தது, இதன்படி ஈரான் மீது ஐந்து நாட்கள் தாக்குதலை நிறுத்தப் போகிறோம் என டிரம்ப் கூறியிருந்தார் உடனடியாக ஈரான் அப்படி எந்த ஒரு பேச்சுவார்த்தையையும் நடக்கவில்லை என அறிவிப்பு வெளியிட்டது. இத்தகைய சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஈரானும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன, ஈரான் மேற்கொண்ட அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய மாட்டோம் என வாக்குறுதி தந்திருக்கிறது என கூறினார்.
ஈரானை சேர்ந்த நம்பகமான தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் எனக் கூறிய டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக மிக முக்கியமான ஒரு உடன்பாடு இரு நாடுகளுக்கும் எட்டி இருக்கிறது என சூசகமாக தெரிவித்து இருந்தார். இது உலக அளவில் கச்சா எண்ணையின் விலையை குறைத்து இருக்கிறது. இந்த சூழலில் தான் ஈரான் நாட்டு ராணுவம் அமெரிக்காவுடன் எந்த ஒரு அமைதி பேச்சுவார்த்தையிலும் நாங்கள் ஈடுபடவில்லை என திட்டவட்டமாக மறுத்து இருக்கிறது.
ஃபாய்ஸ் செய்தி முகமை ஈரான் நாட்டு ராணுவத்தின் தலைமை அதிகாரி இப்ராஹிம் ஃசோல்பஹாரி வெளியிட்டதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தை எந்த ஒரு அமைதி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அமெரிக்கா அதனுடனேயே பேச்சுவார்த்தை நடத்திக் கொள்கிறதோ என கிண்டல் செய்து இருக்கிறது.
உங்களுடைய தோல்வியை உடன்பாடு என நீங்கள் எப்படி கூறுவீர்கள் என கூறி இருக்கும் அவர் ஈரானின் நிபந்தனைகள் நிறைவேறும் வரை இந்த பிரச்சனை தீராது என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த பிரச்சனை தீராது ராணுவ முறையில் மட்டுமே தீரும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு என தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவுடன் இப்போது மட்டுமல்ல எப்போதுமே நாங்கள் அமைதி பேச்சு வார்த்தை நடத்தியதில்லை என தெரிவித்திருக்கிறார்.
அவரது இந்த அறிக்கை பெரிய குழப்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. டிரம்ப் விரைவில் உடன்பாடு எட்டி விடும் எனக் கூறுகிறார் ஆனால் ஈரான் நாட்டு ராணுவம் அதனை மறுத்து இருக்கிறது. ஈரான் அரசு தரப்பில் இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்போ தகவலோ வெளியாகவில்லை. இதனால் ஈரான் யார் கட்டுக்குள் இருக்கிறது, இந்த போர் எதை நோக்கி தான் செல்கிறது என அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
More From GoodReturns

ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!



Click it and Unblock the Notifications