மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரானிலிருந்து இஸ்ரேல் நோக்கி புதிய ஏவுகணைகள் அலை இன்று மாலை ஏவப்பட்டு உள்ளது வீசப்பட்டுள்ளன. இதை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல்களை தடுக்க இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடக்கும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மொபைல் போன்கள் மூலம் எச்சரிக்கை அனுப்பப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் X தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானிலிருந்து பல ஏவுகணைகள் இஸ்ரேல் நோக்கி செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் இஸ்ரேலின் பல பகுதிகளை குறிவைத்துள்ளன. ஈரான் இந்த தாக்குதல்களை இஸ்ரேலின் தெற்கு பராஸ் ஏரிவாயு தளத்தில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தியதாக கூறுகிறது.

ஈரானின் மிகப்பெரிய எரிவாயு வயலான தெற்கு பார்ஸ் (South Pars) தளத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடந்துள்ளது. இந்த எரிவாயு வயல் கத்தார் நாட்டுன் பகிர்ந்து கொள்ளப்படும் உலகின் மிகப்பெரிய எரிவாயு வளமாகும்.
இதற்கு பதிலடியாக ஈரான் தொடுத்த தாக்குதலில் இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலான ஏவுகணைகளை வான்பரப்பிலேயே தடுத்தன. ஆனால் சில ஏவுகணைகளின் துண்டுகள் அல்லது கிளஸ்டர் முனைகள் (cluster munitions) இஸ்ரேல் மீது விழுந்துள்ள காரணத்தால் சேதம் அடைந்துள்ளது.
இஸ்ரேலின் மத்திய பகுதிகளில், குறிப்பாக டெல் அவிவுக்கு கிழக்கே உள்ள ரமத் கான் (Ramat Gan) பகுதியில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் ஒளிபரப்பு அமைப்பு வெளியிட்ட வீடியோவில், ஒரு கட்டிடத்துக்கு கடுமையான சேதம் ஏற்பட்டதை காட்டுகிறது.
தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தியின்படி, அவசர சேவை அறிக்கையில், ஈரானிய ஏவுகணையிலிருந்து வந்த கிளஸ்டர் முனைகள் பல இடங்களில் விழுந்துள்ளன. இதில் ஒன்று ஒரு வீட்டை பாதித்துள்ளது. ரமத் கான் பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களால் பல இடங்களில் தீப்பிடித்து, உடைமைகள் அழிந்துள்ளன என தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த ஏவுகணை தாக்குதல்களில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இந்த புது தாக்குதல் மூலம் புதன்கிழமை பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5.84 டாலர் உயர்ந்து 109.3-ஆக உயர்ந்துள்ளது. அன்று அதிகபட்சமாக $110 வரை சென்றது. அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் 2.82 டாலர் உயர்ந்து 99.02 டாலராக உள்ளது.


Click it and Unblock the Notifications