அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானை பிப்ரவரி 28 முதல் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வரும் வேளையில் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் இன்று இஸ்ரேல், ஈரானில் முக்கியமான எரிவாயு தளத்தை தாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இஸ்ரேலை நோக்கி சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் இஸ்ரேல் - ஈரான் மத்தியிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்தது.

இந்த தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய விமான நிலையமான Ben Gurion Airport-ல் தாக்குதலில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது, இதனால் வணிக விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஈரான் ஏவுகணைகளில் சரி பாதி "கிளஸ்டர் மியூனிஷன்" வகையை சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை இஸ்ரேல் பாதுக்காப்பு அமைப்பு வானில் தாக்கி தடுத்தாலும், இந்த தாக்குதலில் ஏவுகணை நூற்றுக்கணக்கான சிறிய குண்டுகளாக சிதறுகிறது. இந்த "bomblets" பரவலாக பெரிய பகுதியை தாக்கக்கூடியதால், பொதுமக்கள் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இதன் மூலம் Ben Gurion Airport-ல் 3 பிரைவேட் ஜெட் விமானங்கள் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக Ben Gurion Airport-ல் சர்வதேச மற்றும் உள்நாட்டு வணிக விமானங்கள் இயங்காமல் போனது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இஸ்ரேல் நாட்டின் விமான நிறுவனங்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் விமானங்களை இயக்கி, வெளிநாடுகளில் சிக்கியிருந்த குடிமக்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளன. இது அரசின் முன்னுரிமை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், சில கட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு பயணங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை மிகவும் குறைந்த அளவில் மட்டுமே நடைபெறுகின்றன.
Ben Gurion Airport தற்போது வணிக பயன்பாட்டை விட ராணுவ நடவடிக்கைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவங்கள் இந்த விமான நிலையத்தை தங்களின் செயல்பாடுகளுக்காக பயன்படுத்தி வருகின்றன. இதை அறிந்தே இப்பகுதியில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications