இஸ்ரேல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-ல் ஏவுகணை தாக்குதல்.. ஈரான் போட்ட கணக்கு.. தடுமாறிய பங்குகள் - வீடியோ

ஈரான், இஸ்ரேல் மீது இன்று (ஜூன் 19) நடத்திய புதிய ஏவுகணைத் தாக்குதலில், டெல் அவிவ் பங்குச் சந்தை கட்டடம் கடுமையாக சேதமடைந்ததாக அல் ஜசீரா உள்ளிட்ட இஸ்ரேல் நாட்டின் பல உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டு உள்ளது.

இரு நாடுகளுக்கும் மத்தியிலான போர் சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நடத்திய இந்தத் தாக்குதலில், டெல் அவிவ், பெயர் ஷேவா (Be'er Sheva) மற்றும் ரமத் கன் (Ramat Gan) உள்ளிட்ட பல இடங்களில் தாக்கப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டதுடன், 32-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இஸ்ரேல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-ல் ஏவுகணை தாக்குதல்.. ஈரான் போட்ட கணக்கு.. தடுமாறிய பங்குகள் - வீடியோ

பெயர் ஷேவாவில் (Be'er Sheva) உள்ள சொரோகா மருத்துவமனையும் (Soroka Medical Center) இந்த தாக்குதலில் சேதமடைந்ததுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் இதற்கு "மிகக் கடுமையான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

டெல் அவிவ் பங்குச் சந்தை மீது ஈரான் தாக்குதல்
ஜூன் 19, 2025 அன்று, ஈரான் இஸ்ரேல் மீது 25-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில், டெல் அவிவ் பங்குச் சந்தை கட்டடம் "கடுமையான சேதத்திற்கு" உள்ளாகியுள்ளது.

அல் ஜசீரா வெளியிட்டுள்ள தகவல் படி, ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் டெல் அவிவின் மையப் பகுதியைத் தாக்கியதால், பங்குச் சந்தை கட்டடத்தின் கட்டமைப்பு பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த சேதம், இஸ்ரேலின் பொருளாதார மையமான டெல் அவிவின் நிதி நடவடிக்கைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது.

டெல் அவிவ் பங்குச் சந்தை கட்டடத்தின் மீது தாக்குதல் நடந்தாலும் இதன் முக்கிய குறியீடுகள் இன்று லாபத்தில் வர்த்தகமாகி வருகிறது. TA 35, Tel Aviv 20 மட்டுமே சரிவுடன் உள்ளது. இஸ்ரேல் பங்குச்சந்தை ஞாயிற்றுக்கிழமை முதல் வியழக்கிழமை வரையில் இயங்க கூடியது.

இதேபோல் இஸ்ரேல் நாட்டின் டாப் 10 பங்குகளில் Bank Leumi le-Israel, Elbit Systems, Mizrahi Tefahot Bank, NICE, Azrieli Group, ICL Group, Nova ஆகிய 7 நிறுவனங்களும் சரிவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பங்குச்சந்தை கட்டடம் மீதான தாக்குதலை தொடர்ந்து ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலின் மையப்பகுதியில் பல இடத்தில் தாக்குதல் நடத்தியது.

ரமத் கன்: டெல் அவிவ் மாவட்டத்தில் உள்ள ரமத் கன் பகுதியில் ஏவுகணைத் தாக்குதலால் 20-க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் பாதிக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில், பல கட்டடங்கள் சேதமடைந்ததாக "The Times of Israel" அறிவித்தது. அவசர சேவைப் பிரிவுகள், காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்து வருகின்றன.

பெயர் ஷேவா - சொரோகா மருத்துவமனை: இஸ்ரேலின் தெற்கு நகரமான பெயர் ஷேவாவில் உள்ள சொரோகா மருத்துவமனை, அருகில் நிகழ்ந்த ஏவுகணை வெடிப்பின் அதிர்வலையால் சேதமடைந்தது.

இந்த தாக்குதல் மூலம் மருத்துவமனை நேரடியாக தாக்கப்படவில்லை என்றாலும், அருகில் இருந்த காரணத்தால் பாதிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில், மருத்துவமனையின் உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்கள், இஸ்ரேல் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+