சாவியை தொலைச்சுட்டோம்: ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் டிரம்பின் மிரட்டலை நக்கல் செய்யும் ஈரான்!!

மேற்காசிய போர் ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்த வண்ணம் இருக்கிறது. போரில் ஈடுபட்டு இருக்கக்கூடிய ஈரான் , அமெரிக்கா , இஸ்ரேல் ஆகிய நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் போரை தீவிரப்படுத்துவதற்கான செயல்களில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றன.

ஈரான் போர் பல்வேறு நாடுகளிலும் 100% வரை பெட்ரோல் மற்றும் எல்பிஜி விலைகளை உயர்த்தி இருக்கிறது. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் லாக்டவுன் போன்ற சூழல் வந்துவிட்டது. இலங்கை போன்ற நாடுகளில் எல்லாம் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் கூட விலை கூடிவிட்டது. இத்தகைய சூழலில் எப்படியாவது இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என பல்வேறு நாடுகளும் காத்திருக்கின்றன. ஏனெனில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அந்த அளவிற்கு பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தையே நேரடியாக தாக்கி இருக்கிறது.

சாவியை தொலைச்சுட்டோம்: ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் டிரம்பின் மிரட்டலை நக்கல் செய்யும் ஈரான்!!

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமைக்குள் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தாக வேண்டும் இல்லை என்றால் இதுவரை இல்லாத மோசமான தாக்குதலை சந்திக்கும், ஈரான் நரகத்திற்கு செல்லும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து போயிருக்கின்றன. ஆனால் ஈரான் தரப்பிலோ சற்று தளராமல் தொடர்ச்சியாக டிரம்பை கிண்டல் செய்த வண்ணம் இருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் நரகத்திற்கு செல்வீர்கல் என டிரம்ப் மிரட்டல் விடுத்திருக்கும் நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் இருக்கக்கூடிய ஈரான் தூதரகம் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான சாவியை நாங்கள் தொலைத்து விட்டோமே என பதில் தந்துள்ளது.

அதேபோல தென்னாபிரிக்காவில் இருக்கக்கூடிய ஈரான் தூதரகம் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கும் சாவியை பூந்தொட்டிக்கு அடியில் வைத்திருக்கிறோம் , நண்பர்களுக்கு மட்டுமே அதனை எடுத்துக் கொடுப்போம் என எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறது. இது டிரம்பின் கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்யுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது ஆப்ரேஷன் எபிக் ஃபியூரி என்ற பெயரில் தீவிர ராணுவ தாக்குதலை தொடங்கின. இதில் ஈரான் நாட்டுத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, பாதுகாப்பு துறை செயலாளர், ராணுவ தலைமை அதிகாரிகள் என பெருந்தலைகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி தலைவராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் அவரும் காயமடைந்து சிகிச்சையில் இருக்கிறார்.

இதனால் ஈரானை வழிநடத்துவது யார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் முன்னெடுத்த அமைதி பேச்சுவார்த்தையும் நின்று போய்விட்டது. பாகிஸ்தான் தரப்பின் முயற்சியை ஈரான் ஏற்கமுடியாது என தெரிவித்துவிட்டதாம். எனவே ஈரான் போர் அடுத்து எதை நோக்கி செல்லும் என்பதே தெரியவில்லை, ஆனால் இன்னும் சில வாரங்களுக்கு போர் நீடிக்கும் என்பது மட்டுமே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+