அமெரிக்க அதிபர் துருக்கியில் பல விமானங்களை மாறி தனது உயிரை பாதுகாக்க தப்பிய ஓடி கதை வெளிச்சத்திற்கு வந்த நிலையில், ஈரான் டிரம்பை காலாய்த்து வருகிறது. ஈரானின் அரசு ஊடகங்களில் ஈரான் நாட்டின் ராணுவ வலிமை குறித்து டிரம்பும், அமெரிக்க அரசும் எந்த அளவுக்கு பயந்து இருக்கிறார் என்பதையே இது காட்டுவதாக கூறியுள்ளனர். மேலும் இது டிரம்பிற்கு ஒரு பெரிய அவமானமாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டனர்.
ஜூலை மாதத்தில் துருக்கி நாட்டில் NATO அமைப்பின் உயர்மட்ட கூட்டம் நடந்தது, அப்போது அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போர் அச்சம் அதிகமாக இருந்த காலம் அது. இதவேளையில் அமெரிக்க அதிபரை கொல்ல ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு அமைப்புகள் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இதற்கிடையில் தான் டிரம்ப் அமெரிக்காவை விட்டு துருக்கிக்கு சென்றார். துருக்கி நாட்டின் Ankara பகுதியில் நடந்த NATO கூட்டத்திற்கு கலந்துக்கொள்வதற்காக வந்தார். இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு திரும்ப அமெரிக்கு செல்ல தயாரான போது அமெரிக்க உளவு துறைக்கு ஒரு தகவல் வருகிறது.
அதில் துருக்கி விமான நிலையத்தில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை தோல்பட்டையில் வைத்து ஏவுகணை மூலம் தாக்குவதற்கு திட்டமிட்டு வருவதாக தகவல் வந்தது. இந்த தகவலை இஸ்ரேல் கொடுத்தாக கூறப்பட்டாலும், இதன் உண்மை தன்மை யாரும் உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்-ன் பாதுகாப்பு பிரிவு யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து டிரம்ப்-ஐ மீட்க திட்டமிட்டது.
டிரம்ப துருக்கி நாட்டிற்கு கத்தார் அமெரிக்க அரசுக்கு அன்பளிப்பாக கொடுத்த போயிங் 747-8 விமானத்தில் வந்து இறங்கினார். இதை தொடர்ந்து செல்லும் போது ஏர் போர்ஸ் ஓன் விமானத்தில் செல்ல திட்டமிட்டப்பட்டது. இதுவே பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இதற்கு மத்தியில் டிரம்ப் பாதுக்காப்பு படை Air Force One விமானத்தில் இருந்து ஏர்போர்ட் கேட்டரிங் அதாவது விமான பயணிகளுக்கு உணவு கொண்டு வரும் வாகனத்தில் ஏறி மிகவும் ரகசியமாக Air Force C-32A ரக சிறிய விமானத்தில் அமெரிக்கா சென்றுள்ளார் டிரம்ப்.
இந்த நிலையில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், துருக்கியில் Ankara-வில் டிரம்ப் தங்கியிருந்த ஹோட்டல், எந்த தளம், எந்த ரூமில் இருக்கிறார் என்பவது வரையில் ஈரானுக்கு தெரிந்திருந்தாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications