ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கே ஆபத்தானவை எனக் கூறி தான் அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்த நாட்டின் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த ஆண்டிலேயே அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இந்த சூழலில் தான் கடந்த 28ஆம் தேதி திடீரென அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் பல்வேறு நகரங்கள், கட்டிடங்கள் மீதும் கடுமையான தாக்குதல்களை தொடங்கியது. இந்த தாக்குதலில் தான் ஈரான் நாட்டு தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனை அடுத்து ஈரான் பதில் தாக்குதலை தீவிர படுத்த மத்திய கிழக்கு நாடுகளே பற்றி எரிந்து வருகிறது.

இந்தப் போருக்கு அடிப்படை காரணமாக இருப்பது ஈரானிடம் இருக்கக்கூடிய அணுசக்தி திட்டங்கள். இதனை கைவிட மாட்டோம் தங்களின் அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவிடம் தெரிவிக்க மாட்டோம் என கூறி வந்தது. இந்நிலையில் ஈரான் நாட்டு அரசு முதன்முறையாக தங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்திருப்பதாக ஒரு செய்தி வெளியானது. இது மேற்காசிய போரில் மிக முக்கியமான ஒரு திருப்பமாக பார்க்கப்பட்டது.
ஆறாவது நாளாக ஈரானுக்கும், அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் இடையிலான தாக்குதல் நடைபெற்று வரக்கூடிய நிலையில் ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தக்த் ராவஞ்சி மிக முக்கியமான ஒரு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார் என ஸ்கை நியூஸ் அரேபியா ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி ஈரான் தன்னுடைய அணுசக்தி திட்டங்களை கைவிட தயாராக இருக்கிறது ஆனால் அமெரிக்கா அதற்கு மாற்றாக ஏற்றுக் கொள்ளத் தக்க ஒரு சலுகையை வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது அமெரிக்கா திருப்திகரமான மாற்று சலுகை வழங்கினால் ஈரான் அணுசக்தி திட்டங்களை கைவிடும் என ராவஞ்சி கூறியதாக ஸ்கை நியூஸ் அரேபியா செய்தி குறிப்பிடுகிறது.
Operation Epic Fury என்ற பெயரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் மிகத் தீவிரமாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரக்கூடிய சூழலில் திடீரென ஈரான் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது என இந்த தகவல் வெளியானது.
ஆனால் ஸ்கை நியூஸ் அரேபியாவின் செய்தியை திடீரென ஈரான் அரசு மறுத்துள்ளது. ஈரான் அரசுக்கு சொந்தமான ஐஆர்என்ஏ என்ற தளம் வெளியிட்டுள்ள செய்தியில் வெளியுறவு துறை துணை அமைச்சர், அமெரிக்கா ஏற்கத்தக்க மாற்று சலுகைகளை வழங்கினால் ஈரான் அணுசக்தி திட்டங்களை கைவிடும் என கூறியது இப்போது அல்ல என தெரிவித்துள்ளது. அமெரிக்கா ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது தான் அவர் அவ்வாறு கூறினார் என விளக்கம் தந்துள்ளது.
முன்னதாக பிப்ரவரி 17ஆம் தேதி அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா எதிர்பார்த்த உடன்பாடு கிடைக்கவில்லை என்பதால் தான் இந்த தாக்குதலே தொடங்கியது. ஈரானில் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில் அவரது மகன் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இஸ்ரேலும் அமெரிக்காவும் இதனால் திருப்தி அடைந்ததாக தெரியவில்லை அவர்கள் இந்த அரசே வீழ்ந்து ஆட்சி மாற்றமே நடக்க வேண்டும் என விரும்புகின்றன.
More From GoodReturns

ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

டிரம்ப் அலுவலகத்திலேயே கருப்பு ஆடு? போர் ரகசியங்களை வைத்து வியாபாரமா? ஊழியர்களுக்கு தடை?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications