வளைகுடா நாடுகளில் நிலவும் போருக்கு மத்தியில் அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உலகளாவிய பங்குச்சந்தைகள் மிகுந்த தடுமாற்றத்திற்குள் சிக்கி முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமத் பாகர் கலிபாஃப் முதலீட்டாளர்களுக்கு வித்தியாசமான ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
மார்ச் 30ஆம் தேதி சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவில் இருந்து வரும் pre-market சிக்னல்கள் பல நேரங்களில் உண்மையான நிலையை பிரதிபலிக்காமல், அமெரிக்க முதலீட்டாளர்கள் "லாபம் எடுக்கும் வாய்ப்பாக" மாறிவிடுகின்றன என்று கலிபாஃப் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் டிரம்ப்-ன் கருத்து, அமெரிக்க சந்தை கணிப்புகளை கவனித்து "அமெரிக்க அரசும், அமெரிக்க முதலீட்டாளர்களும் சந்தையை உயர்த்தினால் (pump), நீங்கள் விற்றுவிடுங்கள் (short). அவர்கள் கீழிறக்கினால் (dump), நீங்கள் வாங்குங்கள் (long)." இந்த அணுகுமுறை பாரம்பரிய முதலீட்டு முறைக்கு முற்றிலும் மாறுபட்டது என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் இது தான் பலன் அளிக்கும் என முகமத் பாகர் கலிபாஃப் கூறியுள்ளார்.
இவருடைய பதிவு தற்போது 10.5 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.
மார்ச் 22-23 இடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுடன் பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடக்கிறது என தெரிவித்தார். மேலும், ஈரானின் எரிசக்தி அமைப்புகளுக்கு எதிரான தாக்குதலை தாமதப்படுத்தியதாக கூறப்பட்டது. இந்த செய்தி வெளியானவுடன், அமெரிக்க பங்குச்சந்தைகள் வேகமாக உயர்ந்தன. அதே நேரத்தில், எண்ணெய் விலை குறைந்தது. இது பதற்றம் குறைகிறது என்ற எதிர்பார்ப்பை பிரதிபலித்தது.
ஆனால், கலிபாஃப் கூறும் முதலீட்டு உக்தியில், மார்கெட் ரேலியை நம்பாமல், அதற்கு எதிராக செயல்பட்டால் லாபம் கிடைக்கலாம். உதாரணமாக, பங்குகள் உயர்ந்தபோது விற்று, எண்ணெய் விலை குறைந்தபோது வாங்குவது போன்ற முறையை பாலோ செய்தால் லாபம் கிடைக்கலாம் என முகமத் பாகர் கலிபாஃப் கூறுகிறார்.
இந்த உலகளாவிய பதற்றத்தின் தாக்கம் இந்திய சந்தையிலும் தெளிவாகப் பிரதிபலித்துள்ளது. திங்கட்கிழமை, இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் சுமார் 2% மேல் வீழ்ச்சி கண்டன. இது கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வரும் சரிவை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த சரிவுக்கு முக்கிய காரணம், அமெரிக்கா ஈரானில் நீண்டகால தரைவழி தாக்குதல்களுக்கு தயாராகிறது என வெளியான தகவல் தான். மேலும், அமெரிக்க ராணுவம் பெரும் அளவில் மத்திய கிழக்கில் ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும், போர் கப்பல், போர் விமானத்தை திரட்டப்பட்டிருப்பது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
உலகளாவிய பொருளாதாரம் நிலையற்ற நிலையில் இருக்கும் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று பாதுகாப்பான முதலீடுகளுக்கு மாறுகின்றனர். இதுவே சந்தை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
மொத்தத்தில், அமெரிக்கா-ஈரான் பதற்றம் சந்தையை அதிகளவில் பாதிக்கிறது. அரசியல் அறிக்கைகள் அடிக்கடி சந்தையின் திசையை மாற்றுகின்றன.
இந்த நிலையில், முதலீட்டாளர்கள் உடனடி சந்தை எதிர்வினைகளை மட்டும் நம்பாமல், அதன் பின்னணி காரணங்களையும் கவனிக்க வேண்டும். சில சமயங்களில், எதிர்மறையான (reverse) அணுகுமுறை கூட லாபத்தை தரக்கூடும் என்ற புதிய பார்வையை இந்த சூழல் உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

அடிசக்க.. சொன்னதை செய்த Iran..!! இந்தியாவுக்கு லட்டு மாதிரி வரும் 2 LNG கப்பல்..!



Click it and Unblock the Notifications