ஈரான் நாட்டின் அதிபர் டாக்டர் சையத் இப்ராகிம் ரைசியின் எதிர்பாராத மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த துயரத்தையும், அனுதாபங்களையும் தனது டிவிட்டர் பதிவின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில் இந்தியா-ஈரான் உறவுகளை மேம்படுத்துவதில் ரைசி முக்கியமான பங்கை மோடி பாராட்டியுள்ளார். மேலும், ரைசியின் குடும்பத்தினர் மற்றும் ஈரான் மக்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், இந்த துக்க காலத்தில் ஈரானுடன் இந்தியா நிற்பதாக உறுதியளித்துள்ளார்.

ஈரான் நாட்டின் அதிபர் டாக்டர் சையத் இப்ராகிம் ரைசி மரணத்தின் மூலம் தங்கம், கச்சா எண்ணெய், பங்குச்சந்தையில் முக்கியமான பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டு உள்ள வேளையில், இவரது மரணம் இந்தியாவுக்கும், இந்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்திற்கு எப்படியெல்லாம் பாதிக்கும் என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது..?
இந்திய அரசு மத்திய ஆசிய நாடுகள் உடனான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் மிகவும் முக்கியமானதாகத் திகழ்வது, ஈரான் சபாஹார் துறைமுகத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா ஈரானுடன் கையெழுத்திட்டது.
2003 ஆம் ஆண்டில் இந்தியா முதன்முதலில் இத்திட்டத்தை முன்மொழிந்த வேளையில் ஈரானின் சந்தேகத்திற்குரிய அணுசக்தி நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்கத் தடைகள் காரணமாகத் துறைமுகத்தின் வளர்ச்சி தடைப்பட்டது.
இந்த நீண்ட தாமதத்திற்குப் பின்பு சபாஹார் துறைமுகத்திற்காக ஈரான் மற்றும் இந்தியா கடந்த வாரம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் ஹெலிகாப்டர் விபத்து மூலம் ஈரான் அதிபர் இறந்துள்ளது கூடுதல் அதிர்ச்சியாக உள்ளது. சமீபத்திய ஒப்பந்தம் அமெரிக்காவின் விமர்சனத்தை எதிர்கொண்டு உள்ளது மிகவும் முக்கியமானது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், ஈரானுடன் வர்த்தக தொடர்பில் இருப்பவர்கள் மீது தண்டனை விதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார். இருப்பினும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்த துறைமுகத்தின் பிராந்திய நன்மைகளை வலியுறுத்தி, சபாஹாரின் மூலோபாய முக்கியத்துவத்திற்காகச் செய்யப்பட்டது என வலியுறுத்தினார்.
இந்த நிலையில் ஈரான் அதிபர் டாக்டர் சையத் இப்ராகிம் ரைசியின் திடீர் மறைவு, இந்தியா கையெழுத்திட்ட சபாஹார் துறைமுக ஒப்பந்த திட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஈரான் நாட்டின் அரசியல், குறிப்பாக அதிபர் தேர்தலுக்கான பணிகள் முன்னுரிமை பெறக்கூடும் என்றாலும், நடந்து வரும் மோதல்கள் மற்றும் நிலையற்ற தன்மை காரணமாகத் தேர்தலை நடத்துவதற்காக ஈரான் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள 50 நாள் விதிக்கான காலக்கெடு கண்டிப்பாகப் பின்பற்றப்படாது என கூறப்படுகிறது.
இந்தியாவின் சபாஹார் திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்பட்டாலும், இத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஈரான் அதிபர் மரணம் மூலம் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
ஈரானின் முதல் துணை ஜனாதிபதியான 68 வயதான முகமது மொக்பர், ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி இறந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படையில் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடைக்கால ஜனாதிபதியாக, மொக்பர் மூன்று நபர் குழுவின் ஒரு பகுதியாக உள்ளார். இக்குழுவில் பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறை தலைவர் ஆகியோருடன், ஜனாதிபதி இறந்த 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்தலை இக்குழு ஏற்பாடு செய்யும்.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!



Click it and Unblock the Notifications