காசா பகுதியில் இஸ்ரேல் உடனான போர் தொடர்ந்து நடந்து வரும் வேளையில் பெண்கள், குழந்தைகள் என தினமும் மரணத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேல்-க்கு எதிராக உலகின் பல வல்லரசு நாடுகள் ஒன்றிணைந்திருக்கும் வேளையில், காசா மக்களைக் காப்பாற்ற ஈரான் இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைப்பேசியில் பேசிய ஈரான் நாட்டு அதிபரான இப்ராஹிம் ரைசி, காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா தனது அனைத்து பவர்-ஐ பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காலனித்துவத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்ட வரலாற்றையும், உலகலாவிய Non-Aligned Movement நிறுவனர்களில் ஒருவராக ஈரான் இருந்ததையும் நினைவுபடுத்தும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தை அமைந்துள்ளது. மேலும் இஸ்ரேலிய மக்களுக்கு எதிரான நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா தனது அனைத்து பவர்களையும் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஈரானிய செய்தி நிறுவனமான IRNA-க்குத் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி மற்றும் இப்ராஹிம் ரைசி மத்தியிலான பேச்சுவார்த்தையில் காசா-வில் போரை உடனடியாக நிறுத்தவும், இஸ்ரேல் ராணுவ முற்றுகையை நீக்கவும், காஸாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான எந்தவொரு உலகளாவிய கூட்டு முயற்சிக்கும் ஈரான் அரசு ஆதரிக்கிறது என்றும் ஈரான் அதிபர் மோடியிடம் கூறினார்.
இதோடு இப்ராஹிம் ரைசி காசாவில் நடந்த இஸ்ரேல் ராணுவத்தின் அட்டூழியங்கள் உலகெங்கிலும் உள்ள மக்களைக் கடுமையாகக் கோபப்படுத்தியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களைக் கொன்று குவிப்பது தொடர்ந்தால், இது பிராந்திய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு ஈரான் நாட்டுக்கான இந்திய அம்பாசிட்டரான Iraj Elahi தென்னாசிய பகுதியில் இந்தியா தலைமை பொறுப்பில் இருப்பது மட்டும் அல்லாமல் காசாவில் நடக்கும் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவுக்கு முக்கிய பங்குவகிக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறினார்.
இதையே தான் ஈரான் நாட்டு அதிபரான இப்ராஹிம் ரைசி மோடியுடனான தொலைப்பேசி பேச்சுவார்த்தையில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா தனது அனைத்து பவர்களையும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா - ஈரான் நாடுகளுக்கு மத்தியிலான வர்த்தக உறவு பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. ரஷ்யாவின் வருகைக்கு முன்பும் இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் பெரும் பகுதியைத் தீர்ப்பது ஈரான் மற்றும் சவுதி அரேபியா தான்.


Click it and Unblock the Notifications