ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் மறைவு ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் உலக சந்தைகளுக்கும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் சக்தி கொண்டது.
ஈரான் அரசுக்கு சொந்தமான பிரஸ் டிவி ட்விட்டரில், "ஈரான் அதிபர் ரைசி, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்தொல்லாஹியான், கிழக்கு அசர்பைஜான் கவர்னர் மலேக் ரஹ்மதி, கிழக்கு அசர்பைஜான் இமாம் முகமது அலி அலே-ஹாஷெம் மற்றும் பல பயணிகள் உடன் ஈரானின் வடமேற்கு பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.

கடந்த 20 மணிநேரமாக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் சர்வதேசச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்ராகிம் ரைசி மரணம் கச்சா எண்ணெய், தங்கம், பங்குச்சந்தை ஆகியவற்றை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை எப்போது பார்ப்போம். இதை கட்டாயம் முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
கச்சா எண்ணெய் விலையில் தாக்கம்: ஈரானின் தலைமை மாற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தைகளில் உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் நிலையற்ற தன்மைக்கு வழிவகுக்கும். ஏனெனில் முதலீட்டாளர்கள் ஈரானின் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கணிசமான தாக்கம் ஏற்படுத்தும் வல்லமை கொண்டது.
இப்ராகிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குப் பிறகு திங்கள்கிழமை ஆசிய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன. குறிப்பாக பென்ச்மார்க் கச்சா எண்ணெய் ஆன பிரெண்ட் கச்சா எண்ணெய், WTI கச்சா எண்ணெய் ஆகியவை 10 நாள் உயர்வை இன்று பதிவு செய்துள்ளது.
எரிபொருள் சப்ளை சீர்குலைவு: ஈரான் நாட்டின் எண்ணெய் உற்பத்தியில் ஏதேனும் சீர்குலைவு ஏற்பட்டால், சர்வதேச கச்சா எண்ணெய் சப்ளை மற்றும் விலையை பாதிக்கும். குறிப்பாக ஈரான் ஒரு முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர் என்பதைக் வைத்துப் பார்க்கும் போது இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தங்கம் மீதான பாதிப்பு: ஈரான் போன்ற கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் அதிபரின் மரணம் என்பது பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயமாகும். இத்தகைய காலகட்டத்தில் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் மட்டும் அல்லாமல் உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை தேடி ஓடுவார்கள்.
புவிசார் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவும் போது தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகளுக்கான தேவையை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில் தங்கம் மீது அதிகமாக முதலீடு செய்யப்படும் போது தங்கம் விலை உயர்த்தும். ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குப் பிறகு தங்கம் விலை சாதனை உயர்வை எட்டியது.
பங்குச் சந்தைகளில் தாக்கம்: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் மரண செய்தி, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கான சாத்தியமான தாக்கங்களை முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும்போது பங்குச் சந்தைகளையும் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது.
இருப்பினும், OPEC அதிகளவிலான கச்சா எண்ணெய் இருப்பு வைத்திருக்கும் காரணத்தால் தற்போது இதன் சப்ளை செயினில் பாதிப்பு இருக்காது என கணிக்கப்பட்டாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைக் கட்டாயம் பாதிக்கும். இதன் வாயிலாகப் பங்குச்சந்தையை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications