ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரண செய்தி உலக நாடுகளை உலுக்கியுள்ளது, இந்த நிலையில் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் காணாமல் போனதில் இருந்தே சீனா தனது வருத்தத்தையும், ஆதரவையும் தெரிவித்தது.
மேலும் ஹெலிகாப்டர் காணாமல் போனதாக அறிவிப்பு வெளியான போதே சீனா இந்த நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் உதவிகளையும் வழங்க தயார் என்றும் சீனா கூறியுள்ளது.

இந்த நிலையில் திங்கட்கிழமை ஈரானின் துணை ஜனாதிபதி மன்சூரி, ஹெலிகாப்டர் விபத்தில் ரைசி இறந்ததை உறுதிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து சீனா "ஆழ்ந்த இரங்கலை" வெளிப்படுத்தியது. ஈரான்-சீனா உறவின் முக்கியத்துவம் என்ன..? இப்ராஹிம் ரைசி மரணம் சீனாவை எப்படிப் பாதிக்கும்.
ஈரான்-சீனா உறவுகளில் ரைசியின் பங்கு: பொருளாதார மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காகக் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பெய்ஜிங்கிற்கு ஒரு பெரிய குழுவுடன் ரைசி சென்றார், மேலும் அவர் பதவியில் இருந்த காலத்தில் ஈரானையும் சீனாவையும் பல வரையில் நெருக்கமாக பணியாற்றவும், இயக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு பெரும் வெற்றியை அடைந்தனர்.
ஆகஸ்ட் 2021 இல் பதவியேற்ற ரைசி, 2022 செப்டம்பரில் உஸ்பெகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டின் கலந்துகொண்டு சீனப் அதிபர் ஜி ஜின்பிங்கை முதன்முதலில் சந்தித்தார். இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம், முதலீடு, நடப்புறவு என அனைத்தும் மேம்பட்டது. மேலும் சீனாவின் நட்புறவால் ஈரான் SCO இல் முழு உறுப்பினராக உயர்ந்தது இரு நாடுகளின் நடப்புறவில் முக்கியமான வெற்றியாகும்.
சமீப ஆண்டுகளில் தெஹ்ரானும் பெய்ஜிங்கும் வர்த்தக உறவுகள் பெரிய அளவில் மேம்பட்டு உள்ளது. இருப்பினும் ஈரானை, சீனாவின் முக்கியமான பெல்ட் மற்றும் ரோடு இனிஷியடேவ் என்னும் உள்கட்டமைப்பு திட்டத்திற்கு இழுக்கும் முயற்சிகள் பொருளாதாரத் தடைகளால் தோல்வியில் முடிந்தது.
ஈரானுக்கு ஆயுதம் அளிப்பதில் சீனா நீண்டகாலமாக ஒரு முக்கிய பங்கீட்டைக் கொண்டுள்ளது, அதன் இராணுவ வன்பொருள் மற்றும் கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதற்கான முயற்சிகளுக்குச் சீனா உதவுகிறது. இது ஈரானின் சட்டவிரோத அணுசக்தி திட்டத்திற்கான "தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களைப் பகிர" உதவியது என்று RAND கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
ரைசியின் மரணத்திற்குப் பின்பு புது அதிபர் தேர்வு செய்யப்பட்ட பின்பு தான், ஈரான் நாட்டின் சீனா உடனான நிலைப்பாடு குறித்து தெரிய வரும். ஆட்சி மாற்றத்தால் பிற வளைகுடா நாடுகள் போலவே சீனாவின் சார்ந்து இருப்பதை ஈரான் குறைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications