ஈரான் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் 13 நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய இந்த போராட்டங்கள், நாட்டின் 31 மாகாணங்களுக்கும் பரவியுள்ளன, மேலும் அரசு கட்டிடங்களுக்கு தீ வைப்பது போன்ற செயல்களில் போராட்டக்காரர்கள் இறங்கியுள்ளனர். இன்று காலையும் ஈரான் நாட்டின் முக்கிய நகரங்களில் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையும், ராணுவமும் களத்தில் இறங்கி பலரை கைது செய்துள்ளனர். கடந்த 12 நாட்களில் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வியாழக்கிழமை இரவு முழுவதும் ஈரான் நாட்டின் தெஹ்ரான் சாலைகள் போராட்டாக்காரர்களால் நிரம்பி வழிந்தது. மக்கள் எழுச்சிக்கும் அடிப்படையாக இருந்தது பொருளாதார நெருக்கடி.

பொருளாதார நெருக்கடியின் பின்னணி
ஈரான் நாட்டின் ரியால் நாணய மதிப்பு சரிந்து, இறைச்சி, அரிசி போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வருடாந்திர பணவீக்க விகிதம் சுமார் 40 சதவீதமாக இருப்பதால், மக்களின் வாழ்க்கை செலவு (Living Cost) அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் அந்நாட்டு அரசு மக்களுக்கு வழங்கும் முக்கியமான மானிய எரிபொருள் விலையை உயர்த்தியது, மேலும் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் விலையை மறுபரிசீலனை செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
மருந்து மற்றும் கோதுமை தவிர பிற பொருள்களுக்கு டாலர்-ரியால் மாற்று விகித சலுகையும் நீக்கப்பட்டது, இதனால் உணவு பொருட்கள் விலையை கடுமையாக உயர்த்திய சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் பாதிப்பு அதிகரித்தது.
இந்த பொருளாதார அழுத்தங்கள் உடன், 2022இல் மஹ்சா அமினி காவல் கட்டுப்பாட்டில் இறந்த நாளில் இருந்து மக்கள் மத்தியில் உருவான அரசு மீதான அதிர்ப்தி தற்போது பெரும் போராட்டமாக வெடித்து மக்கள் எழுச்சியாக மாறியுள்ளது.

போராட்டத்தின் தீவிரம்
ஈரான் நாட்டில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள ஈரான் நாட்டின் முன்னாள் இளவரசர் ரெசா பஹ்லவி (Reza Pahlavi), 'இது கடைசிப் போர்' என்று அறிவித்தது வியாழக்கிழமை போராட்டத்திற்கு மக்களுக்கு அழைப்பு விடுத்தது மூலம் நாடு முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்றது. ரெசா பஹ்லவி 1978 முதல் வெளிநாடுகளில் வசித்து வருகிறார்.
இந்த போராட்டத்தில் இதுவரை 34 போராட்டக்காரர்கள் மற்றும் 4 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 2,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானில் இண்டர்நெட் சேவை, டெலிகாம் சேவைகள் முடக்கப்பட்டு வெளியுலகத்திற்கான இணைப்பு மொத்தமாக துண்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும் போராட்டக்காரர்கள் அரச சொத்துக்களையும், அரசு கட்டிடங்களுக்கு தீ வைத்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதோடு நேற்றைய போராட்டம் குறித்து ஈரான் அரசு செய்தி சேனலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரவாத ஏஜெண்ட்கள் தீயிட்டு அரசு சொத்துக்களை நாசம் செய்ததாகவும், வன்முறையை தூண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
போராட்டங்கள் அரசுக்கு எதிரான பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், Ayatollah Ruhollah Khomeini தலைமையிலான அரசு கடும் அடக்குமுறையை கையாண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேவேளையில் மக்கள் போராட்டத்தை அமெரிக்கா இதை கவனித்து வருகிறது.


Click it and Unblock the Notifications