ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் திங்கள்கிழமை முதல் மெல்ல மெல்ல குறைந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஒருபக்கம் அரசுக்கு எதிரான போராட்டங்கள் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடந்த வார இறுதியில் இருந்து அரசு ஆதரவு பெற்ற பேரணிகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றதால் போராட்டங்களின் தீவிரம் குறைந்துள்ளது.
ஜனவரி 15, 2026 நிலவரப்படி, ஈரான் அரசு போராட்டங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. பல ஆயிரம் பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது, போராட்டத்தை கட்டுப்படுத்துவதில் ராணுவம் இறங்கியுள்ளது.

இதேபோல் அமெரிக்காவின் தாக்குதல் முடிவுக்கு சவுதி தலைமையில் வளைகுடா நாடுகளும், ரஷ்யாவும் இணைந்து பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் கத்தார் அரசு அந்நாட்டின் விமான தளத்தில் இருந்து அமெரிக்க ராணுவத்தை வெளியேற அறிவித்துள்ளது, சவுதி தனது வான்பரப்பை அமெரிக்க ராணுவம் பயன்படுத்த கூடாது என அறிவித்து போன்ற முக்கியமான விஷயங்கள் ஈரான் நாட்டின் மக்கள் போராட்டம் குறைய துவங்கியுள்ளது.
ஈரான் வான்வெளி மூடல் மற்றும் மீண்டும் திறப்பு
ஈரான் அரசு இன்று சுமார் ஐந்து மணி நேரம் வான்வெளியை மூடியது. அமெரிக்க ராணுவ நடவடிக்கை அச்சம் காரணமாக இந்த மூடல் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஈரான் நாட்டில் விமான போக்குவரத்தை பெரிதும் பாதித்தது. தற்போது போராட்டம் கட்டுக்குள் வந்துள்ளது, அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஆகியவற்றின் மூலம் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் தடை
ஈரானில் இன்டர்நெட் தடை போராட்டம் குறையும் ஏழாவது நாளாக இன்றும் தொடர்கிறது. போராட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அரசு இந்த இண்டர்நெட் முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் தகவல் பரிமாற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரான் நாட்டில் இண்டர்நெட் சேவையை கொண்டு வருவதற்காக ஸ்டார்லிங்க் நிறுவனம் ஈரானில் இலவச சாட்டிலைட் இன்டர்நெட் சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. பிரான்ஸ் அரசு Eutelsat சாட்டிலைட் டெர்மினல்களை அனுப்பும் வழிகளை ஆராய்ந்து வருகிறது.
ஈரான் நீதித்துறையின் மறுப்பு
மேலும் ஈரான் போராட்டக்காரர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய எர்ஃபான் சோல்டானி விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. சனிக்கிழமை கைது செய்யப்பட்ட 26 வயது இளைஞர் எர்ஃபான் சோல்டானி-க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியான அறிக்கைகளை ஈரான் நீதித்துறை மறுத்துள்ளது. இதை ஈரான் நீதித்துறை இந்த மறுப்பை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. போராட்டம் குறைய இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது
அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்து
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் எதிர்க்கட்சி தலைவரான ரெசா பஹ்லவி (ஈரானின் கடைசி ஷாவின் மூத்த மகன்) குறித்து முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார். தற்போதைய ஈரான் அரசு அமைப்பு சரிந்தால் ரெசா பஹ்லவிக்கு உள்நாட்டில் போதிய ஆதரவு இருக்குமா என்பது சந்தேகம் என்று தெரிவித்துள்ளார். இது ஈரான் ஆட்சி மாற்ற சாத்தியங்களை குறைத்துள்ளது. அதேபோல் அமெரிக்க அரசின் தாக்குதல் முடிவையும் தள்ளிவைக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்
ஐக்கிய நாடுகள் அதாவது ஐநா-வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இன்று ஈரான் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்ட உள்ளது. உலக அளவில் ஈரான் போராட்டங்கள் குறித்து பீதி அதிகரித்துள்ள வேளையில் இந்த கூட்டம் சர்வதேச அளவிலான நடவடிக்கைகளை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!



Click it and Unblock the Notifications