பெட்ரோல் விலை 10-15 ரூபாய் குறைய போகுது.. Hormuz-ஐ திறக்க தயாரான ஈரான்.. அமெரிக்காவுக்கு இன்ப அதிர்ச்சி!

உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் வழித்தடத்தை ஈரான் ராணுவப் படைகள் முடக்கியிருக்கும் வேளையில், 7 நாட்களில் திறக்க தயாராக இருப்பதாக ஈரானின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

ஆனால் அதற்கு 2 கண்டிஷன்களை ஈரான் தரப்பில் வைக்கப்பட்டு உள்ளது, முதலில் அமெரிக்கா ராணுவம் ஈரான் துறைமுகத்தின் மீது விதிக்கப்பட்டு உள்ள கடற்படை முடக்கத்தை நீக்க வேண்டும், அடுத்த முக்கியமான கண்டிஷன் பெர்சியன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் வழித்தடத்தில் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக குறைக்க வேண்டும்.

பெட்ரோல் விலை 10-15 ரூபாய் குறைய போகுது.. Hormuz-ஐ திறக்க தயாரான ஈரான்.. அமெரிக்காவுக்கு இன்ப அதிர்ச்சி!

இதைச் செய்தால் வெறும் 7 நாட்களில் ஹார்முஸ் வழித்தடம் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்துக்குத் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதேவேளையில் ஈரான் ஹார்முஸ் வழித்தடத்தை எப்படித் திறக்கும், அனைத்து கப்பல்களுக்கும் திறக்கப்படுமா..? கட்டணம் வசூலிக்கப்படுமா..? போன்ற முக்கியமான விபரங்களைத் தெரிவிக்கவில்லை.

இதேபோல் அமெரிக்காவில் நடக்கும் ஐநா கூட்டத்தில் பங்கேற்கும் ஈரான் குழுவினர் போர் விவகாரம் குறித்து அமெரிக்காவிடம் ஆலோசனை செய்ய முழு அதிகாரம் கொண்டது என ஈரானின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே டிரம்ப் ஈரான் பிரதமரைச் சந்தித்துப் பேச உள்ளதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வார இறுதியில் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு டிரம்ப் கடைசி நேரத்தில் தனது முடிவைப் பின்வாங்கியது, இதற்கு முன்பு ஈரான் ராணுவம் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் கட்டாயம் பெரும் தாக்குதலைப் பதிலடியாக எதிர்கொள்ளும் என எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அமெரிக்கா ஈரான் மீதும், ஹவுதிக்கள் மீதும் எவ்விதமான தாக்குதலையும் நடத்தவில்லை, இதனைத் தொடர்ந்து 2 முக்கிய கண்டிஷன் உடன் ஹார்முஸ் வழித்தடத்தைத் திறப்பது குறித்து ஈரான் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது, பெரும் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா - ஈரான் மத்தியில் சுமார் 7 மாதங்களாகக் கடுமையான போர் நடத்து வருகிறது, இந்த போரை நிறுத்த பாகிஸ்தான் கடுமையான முயற்சிகள் செய்தது. ஆனால் அனைத்து முயற்சிகளும் பெரும் தோல்வியில் முடிந்து ஒமான் தலையிட்டு ஈரானைப் பேச்சுவார்த்தைக்கு உட்கார வைத்த பின்பு இரு நாடுகள் மத்தியிலான தாக்குதல் அளவுகள் குறைந்துள்ளது.

ஈரான் தற்போது ஹவுதி படைகளுக்கு அதிகப்படியான ஆதரவு கொடுப்பது மூலம் ஹவுதிகள் சவுதி அரேபியாவுக்கு நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளது. இதேபோல் ஹார்முஸ் போலவே வளைகுடாவில் மற்றொரு போக்குவரத்து வழித்தடமான பாப் அல் மண்டெப்-ஐ ஹவுதிக்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

ஹார்முஸ் வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளை அதிகரித்தால் கட்டாயம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 10-15 ரூபாய் குறையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+