வளைகுடா பகுதியில் அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த போருக்கு முடிவுகாண அமெரிக்கா 15 அம்சங்களைக் கொண்ட புதிய சமாதான திட்டத்தை முன்வைத்துள்ளது. இந்த திட்டத்தில் ஒரு மாத கால போர் நிறுத்தத்தை (ceasefire) கொண்டு வந்து, அதன் பின்னர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் இந்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் தரப்பில் கடுமையான எதிர்ப்பு அதிகரித்துள்ளதால், உடனடி தீர்வு கிடைக்கும் வாய்ப்பு குறைந்து வருகிறது.
அமெரிக்கா முன்வைத்துள்ள திட்டத்தில், ஈரானின் அணு திட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பதுடன், அதன் ஆதரவிலுள்ள பிராக்சி அமைப்புகளுக்கு அளிக்கப்படும் உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உலக எரிசக்தி வர்த்தகத்திற்கு முக்கியமான Strait of Hormuz வழித்தடம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் போன்ற முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு மாத கால தற்காலிக போர்நிறுத்தம் அறிவித்து, அதன் மூலம் நேரடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஈரானின் மறுப்பு:
ஆனால், ஈரான் இந்த திட்டத்தை ஏற்க முடியாது என வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், கடந்த கால பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களே. அமெரிக்க அதிபர் டொலாண்ட் டிரம்ப் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது, இரு தரப்பு மத்தியில் ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் டிரம்ப் உத்தரவின் பெயரில் அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல்களை நடந்தியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
இதனால், "இன்னொரு முறை ஏமாற விரும்பவில்லை" என்ற நிலைப்பாட்டை ஈரான் அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், அமெரிக்க ராணுவம் மத்திய கிழக்கில் படைகளை அதிகரித்திருப்பது இந்த சமாதான முயற்சிகள் உண்மையா என்ற சந்தேகத்தை அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது ஈரான் நாட்டை அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்து உட்கார வைக்கும் பணியை பாகிஸ்தான், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் செய்து வருகிறது.
பேச்சுவார்த்தை முடிவு
ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க தூதர்கள் Witkoff மற்றும் Kushner நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், இவர்களுசன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயக்கம் காட்டியுள்ளது. அதற்கு பதிலாக, அமெரிக்க துணை அதிபர் JD Vance உடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே, இரு தரப்புகளுக்கிடையே நம்பிக்கை குறைவாக இருப்பதைக் காட்டுகிறது.
ராணுவ முன்னேற்பாடுகள்
அமெரிக்கா மத்திய கிழக்கில் கூடுதல் படைகள், போர்விமானங்கள் ஆகியவற்றை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இது ஈரான் தரப்பில் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், இன்னும் 2 முதல் 3 வாரங்கள் வரை போர் தொடரும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஈரானின் எதிர்பார்ப்புகள்
ஒரு மாத போர் நிறுத்தம் மற்றும் சமாதான பேச்சுவார்த்தைக்கை முன் ஈரான் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. போரில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், Strait of Hormuz மீது அதிகாரப்பூர்வ கட்டுப்பாடு ஈரானுக்கே சொந்தம் என அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஈரானுக்கு எதிராக எதிர்காலத்தில் ராணுவ தாக்குதல்கள் நடத்தாது என உத்தரவாதம் அமெரிக்க அளிக்க வேண்டும், ஈரான் எந்த ஏவுகணை பயன்படுத்த வேண்டும் எதை பயன்படுத்த கூடாது என்பதை சொல்லக்கூடாது போன்ற விதிமுறைகளும் இத்திட்டத்தில் இருக்கக்கூடாது என்பதும் அதன் முக்கிய கோரிக்கைகளாக முன்வைத்துள்ளது.
அமெரிக்காவின் 15 அம்ச திட்டம் ஒரு முக்கிய முயற்சியாக இருந்தாலும், ஈரானின் கோரிக்கைகளை கட்டாயம் அமெரிக்கா ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரு தரப்புகளுக்கிடையேயான நம்பிக்கையின்மை மற்றும் கடுமையான நிபந்தனைகள் காரணமாக, இந்த பேச்சுவார்த்தையில் உடனடி தீர்வு கிடைக்கும் என்பதில் சாத்தியம் குறைவாக உள்ளது.
More From GoodReturns

தொடர்கிறது ஈரான் போர்!! நாளை காலை 10 மணிக்கு தரமான சம்பவம் காத்திருக்கிறது என அறிவித்த டிரம்ப்!!

ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

பெட்ரோல் விலை ரூ.119, டீசல் விலை ரூ.127..!! இந்த மாத கடைசியில் அதிர்ச்சி காத்திருக்கு மக்களே!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications