ஈரான் போர் உலகம் முழுவதுமே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் எப்போது போர் முடிவுக்கு வரும் என கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். அமெரிக்கா தரப்பில் ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தொடர்ச்சியாக கூறி வருகிறார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் அமெரிக்கா இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார். இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவடைந்தன.

ஈரானில் சரியான பிரதிநிதிகளை தேர்வு செய்து அமெரிக்கா அவர்களுடன் ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் பாசிடிவான விஷயங்கள் நடந்து வருகின்றன என குறிப்பிட்ட அவர் ஈரானில் யாருடன் பேசி வருகிறோம் எதை பற்றி பேசி வருகிறோம் என்ற தகவலை வெளியிடவில்லை.
ஈரானுடன் அமெரிக்காவின் பேச்சுவார்த்தை தொடரும் என கூறிய அவர் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் இந்த பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ளனர் என குறிப்பிடுகிறார். தற்போது இந்தப் போரில் அமெரிக்கா தான் வென்றிருக்கிறது ஏனெனில் ஈரான் அனைத்தையும் இழந்த நிலையில் ஒப்பந்தத்திற்கு முன் வந்திருக்கிறது என கூறியிருக்கும் டிரம்ப் , ஈரானை சேர்ந்த நம்பகத்தன்மையான நபர்களோடு அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என அவர் கூறியிருக்கிறார்.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க கூடாது என்ற அமெரிக்காவின் நிபந்தனையை அந்நாடு ஏற்று கொண்டிருக்கிறது என கூறியுள்ள டிரம்ப், ஈரான் தரப்பிலும் ஒரு உடன்பாடு ஏற்படுவதற்கு ஆர்வமாக உள்ளனர் எனக் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஈரான் அமெரிக்காவுக்கு ஒரு முக்கியமான பரிசை வழங்கியுள்ளது என டிரம்ப் கூறினார்.
அந்த பரிசு உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சூசகமாக பதிலளித்தார். எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான ஈரானின் அந்த பரிசு அதிக விலை மதிப்பு கொண்டது என டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால் தெளிவான விவரங்களை அவர் வெளியிடவில்லை.
ஈரான் போர் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்த ஹார்முஸ் ஜலசந்தி தான் காரணம். வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எல்பிஜி போன்றவற்றை கொண்டு செல்ல இருக்கும் ஒரே கடல் வழி பாதை ஹார்முஸ் ஜலசந்தி. இதனை ஈரான் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால் தான் இந்தியா உட்பட பல நாடுகளிலும் எல்பிஜி உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு யார் வசம் செல்ல போகிறது என்பதை பொறுத்து தான் இந்த போரின் வெற்றியே தீர்மானிக்கப்படும். இந்த சூழலில் டிரம்ப், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்புடைய ரகசிய பரிசை அமெரிக்காவுக்கு தந்துள்ளது என டிவிஸ்ட் வைத்து பேசி இருப்பது உலக கவனம் பெற்றுள்ளது.
More From GoodReturns

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!



Click it and Unblock the Notifications