ஈரான் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா? மீண்டும் பாகிஸ்தான் செல்லும் ஜே.டி.வான்ஸ்; புதிதாக மிரட்டும் ஈரான்!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இதுவரை இருதரப்பிற்கும் ஒரு சுமூகமான உடன்பாடு எட்டப்படவே இல்லை. ஒவ்வொரு நாளும் அமெரிக்காவும் ஈரானும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்த வண்ணம் இருக்கின்றன. இந்த சூழலில் நாளைய தினம் முடிய இருக்கும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா அல்லது மீண்டும் இருதரப்பும் போரில் ஏற்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

ஈரான் போர் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் இது தொடர்பான இரண்டாம் கட்ட அமைதி பேச்சு வார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இன்றைய தினம் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வார் என ஆக்சிஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையிலாவது ஒரு உடன்பாடு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

ஈரான் போர் : மீண்டும் பாகிஸ்தான் செல்லும் ஜே.டி.வான்ஸ்..!! புதிதாக மிரட்டும் ஈரான்..!!

இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையின் ஒரு பகுதியாக ஒரு இடைக்கால ஒப்பந்தம் ஏற்படலாம் என்றும் போர் நிறுத்தம் இன்னும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்க படலாம் என்றும் நிபுணர்கள் கணிப்பு வெளியிடுகின்றனர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் முன்பை கடுமையான தாக்குதலை இரு தரப்பும் தொடுக்கும் என்கின்றனர்.

இதற்கிடையே ஈரானின் ஒரு சரக்கு கப்பலை அமெரிக்கா சிறை பிடித்து வைத்திருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இரு தரப்பும் பிடிவாதம் பிடிப்பதே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருக்க முக்கிய காரணமாகும்.

Also Read

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு வரும் வரை ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையை கைவிட மாட்டோம் என தெரிவித்திருக்கிறார். ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு வரும் வரை இந்த முற்றுகை முடிவுக்கு வராது எனக் கூறியிருக்கும் அவர் ஒவ்வொரு நாளும் ஈரான் 500 மில்லியன் டாலர்களை இழந்து வருகிறது மேற்கொண்டு பணத்தை இழக்க அவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன் என தன்னுடைய சமூக வலைதள பதிவில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

Recommended For You

ஆனால் ஈரான் அரசின் மூத்த அதிகாரியான முகம்மது பாக் கலிபாஃப் மிரட்டி தங்களை பணிய வைக்க முடியாது எனக் கூறியிருக்கிறார். நாடாளுமன்ற சபாநாயகராக வும் பேச்சுவார்த்தைக் குழுவின் முக்கிய உறுப்பினராகவும் இடம்பெற்றிருக்கும் அவர் மிரட்டியும் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தும் அதன் மூலம் பேச்சுவார்த்தைக்கு வர வைத்து ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி விடலாம் என அமெரிக்கா நினைக்கிறது ஆனால் அது நடக்காது என தெரிவித்திருக்கிறார்.

எங்களை மிரட்டி பேச்சுவார்த்தையில் சரண்டர் செய்ய வைக்கலாம் என டிரம்ப் நினைக்கிறார் அது முடியாது அது நடக்காது என கூறியிருக்கிறார். மேலும் 2 வார கால போர் நிறுத்தம் இன்னும் தீவிரமாக போருக்கு எங்களை தயார் படுத்த உதவியிருக்கிறது என அவர் பகிரங்கமாக கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+