ஈரானின் தெற்கு ஹார்மோஸ்கான் (Hormozgan) மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் ஒரு பெண்கள் ஆரம்பப் பள்ளி மீது இஸ்ரேல் - அமெரிக்க படைகள் நடத்தப்பட்ட தாக்குதலில் 53 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். ஈரான் அரசு ஊடகமான IRNA இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலால் பள்ளி கட்டடம் முழுவதும் இடிந்துள்ளது. தாக்குதல் நடந்த நேரத்தில் இப்பள்ளியில் இளம் மாணவிகள் நிரம்பியிருந்ததாகவும், அவர்கள் அப்பாவி குழந்தைகள் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி X தளத்தில் வெளியிட்ட பதிவில், "தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் ஆரம்பப் பள்ளியில் இஸ்ரேல் - அமெரிக்க படைகள் குண்டுவீச்சியுள்ளனர். ஏராளமான இளம் மாணவிகள் இருந்த இடத்தில் இந்த தாக்குதல் நடந்ததுள்ளது. இந்த ஒரு இடத்தில் மட்டும் 50க்கும் அதிகமான அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொடுரத்தை ஈரான் மக்கள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். இதற்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம்" என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல், ஈரானின் தென்கிழக்கு துறைமுக நகரமான சபஹாரில் ஒரு குண்டுவெடிப்பு நடந்ததாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல்கள் ஈரானின் "பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய இறையாண்மை" மீதான தாக்குதல் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் இராணுவமல்லாத பகுதிகள் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் அரசு ஊடகங்கள் கூறியுள்ளது.

இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கு பகுதியில் ராணுவ மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. ஈரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக பதிலடி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. இந்த சம்பவம் அணு ஆயுத பிரச்சினைக்கு அமைதி தீர்வு காணும் முயற்சிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
ஈரானின் மினாப் நகரில் பெண்கள் பள்ளி மீது நடந்த தாக்குதல் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஈரான் தாக்குதலுக்கு அமெரிக்க அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவிக்க துவங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications