ஈரான் உடனான போரில் அமெரிக்கா அதிகப்படியான இழப்புகளை எதிர்கொண்டு வரும் வேளையில், வளைகுடா நாடுகளும் கடுமையான எதிர்ப்புகளை காட்ட துவங்கியிருக்கிறது. இதனால் முக்கியமான முடிவை எடுக்க திட்டமிட்டு வருகிறது.
வளைகுடா நாடுகளில் இருக்கும் 20 ராணுவ பேஸ்களில் இருக்கும் 40000 ராணுவ வீரர்களை குறைக்கவும், பல இடத்தில் தன்னுடைய ராணுவ தளத்தை காலி செய்யவும் திட்டமிட்டு வருவதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

ஈரானின் 'பட்ஜெட் தாக்குதல் முறை'யின் மூலம் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்துள்ளது, குறிப்பாக இப்பகுதியில் மிகப்பெரிய தளமாக இருக்கும் குவைத் ராணுவ தளத்தில் போர் விமானம், எரிபொருள் சேமிப்பு கிடக்கு, ராணுவ கட்டமைப்பு என பலற்றை காலி செய்துள்ளது ஈரானின் ட்ரோன் தாக்குதல்.
இந்த நிலையில் பென்டகனில் இருக்கும் உயர்மட்ட குழு பாதிப்படைந்த ராணுவ தளத்தை சரி செய்ய பெரும் தொகையை முதலீடு செய்ய வேண்டும். இதனால் இப்பகுதியில் இத்தகையை பெரும் படைகளும், கட்டமைப்புகளும் உண்மையில் தேவையா என கேள்வி கேட்க துவங்கியுள்ளது.
இதனால் அமெரிக்க ராணுவம் இப்பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்களை பாதியாக குறைக்கவும் வாய்ப்புள்ளது. இது ஈரானுக்கு மிகப்பெரிய வெற்றியாக இருந்தாலும், அமெரிக்கா ராஜதந்திர முறையில் காய்களை நகர்த்தும் முடிவாகவே இதை பார்க்கப்படுகிறது.
ஈரானுக்கு ஏன் இது முக்கியம்?
ஈரான் நீண்ட காலமாக வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என கூறி வருகிறது. சமீபத்தில் ஈராக் நாட்டில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த அமெரிக்க ராணுவம் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மொத்தமாக வெளியேற நாள் குறித்துள்ளது.
ஈரான் போர் துவங்கியதில் இருந்து அமெரிக்க ராணுவத்தை தாக்குவதற்காகவே ஈரான் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதில் வளைகுடா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதை வளைகுடா நாடுகளும் ஒப்புக்கொண்டு உள்ளது.
அமெரிக்காவின் பலவீனம்
இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறினால் ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் கூடுதல் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். இதேவேளையில் ஈரான் உடனான போரில் அமெரிக்கா எந்தளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதை உலக நாடுகளுக்கு தெரிய வந்துள்ளது.
ஒருபக்கம் ஆயுத தட்டுப்பாடு, நிதி தட்டுப்பாடு.. மறுமுனையில் அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களை ஈரான் போன்ற சிறிய பலம் கொண்ட நாடுகளும் தாக்க முடியும் என்பதையும் காட்டியுள்ளது. மேலும் இந்த போரில் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர், நூற்றுக்கணக்கில் காயமடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளுக்கு நெருக்கடி
இதேவேளையில் அமெரிக்கா வளைகுடா நாடுகளில் இருந்து வெளியேறினால் அதன் நீண்ட கால பாதுகாப்பு அரண் அடிவாங்கும், இதை வாய்ப்பாக பயன்படுத்தி ஈரான் ஆதிக்கம் செய்ய முடியும் என்ற அச்சமும் உள்ளது.
இந்த அச்சத்தை பயன்படுத்தி அமெரிக்கா வளைகுடா நாடுகளை இன்புளூயன்ஸ் செய்யவும் முடியும். இதனால் வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க தளத்தை சரி செய்ய GCC நாடுகளே உதவி செய்ய முன்வந்து அமெரிக்க படையை தக்க வைக்கலாம். ஆனால் தற்போதைய வளைகுடா நாடுகள் எதிர்க்கொள்ளும் பாதிப்பு அளவுகளை பார்க்கும் போது ஈரான் உடன் பேச்சுவார்த்தை மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரலாம் என திட்டம் போடுவதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications