கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா.. இந்தியாவுக்கு ஈரான் கொடுத்த ஜாக்பாட்..!

Iran seeks india's help and investment; Offering 2021 Iran - China alike deal with oil discount

2021 ஆம் ஆண்டில் சீனாவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தம் போலவே, ஈரான் தற்போது இந்தியாவிற்கு ஒரு சலுகையை வழங்கியுள்ளது.

ரஷ்யா போலவே மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டு உள்ள ஈரான் நாட்டு அரசு தனது எனர்ஜி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் முதலீடுகளை ஈர்க்க முயற்சி செய்துள்ள நிலையில், ஈரான் நாட்டுக்கு நீண்ட காலமாக வர்த்தகக் கூட்டாளியாக இருக்கும் இந்தியா உடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் தற்போது சீனாவுக்கு கொடுத்த அதே பிரம்மாண்ட சலுகையை இந்தியாவுக்கும் அளிக்க ஈரான் தயாராகியுள்ளது.

சர்வதேச பொருளாதாரம்

சர்வதேச பொருளாதாரம்

சர்வதேச பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் நிலையிலும், ரெசிஷன் அச்சத்தால் நிறுவனங்கள் ஊழியர்களைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்து பொருளாதார வளர்ச்சியிலும், வர்த்தக வளர்ச்சியிலும் மோசமான நிலையில் இருக்கும் வேளையில் இந்தியா மட்டும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் உள்ளது.

ரஷ்யா-வின் தள்ளுபடி

ரஷ்யா-வின் தள்ளுபடி

இதற்கு மிக முக்கியக் காரணம் ரஷ்யா கொடுத்து வரும் மிகப்பெரிய கச்சா எண்ணெய் டிஸ்கவுன்ட் தான். ரஷ்யா தனது கச்சா எண்ணெய்-ஐ சர்வதேச விலையை விடவும் சுமார் 40 சதவீத தள்ளுபடியில் இந்தியாவுக்கு விற்பனை செய்கிறது. இதனாலேயே இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே உள்ளது.

ஈரான்

ஈரான்

இப்படியிருக்கையில் தான் ஈரான் அரசு தனது எனர்ஜி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் முதலீடுகளை ஈர்க்க முயற்சி செய்துள்ள நிலையில், இதற்காக இந்தியாவின் உதவியை நாடியுள்ளது ஈரான். ஈரான் அரசு இதேபோன்ற ஒப்பந்தத்தைச் சீனாவுடன் போட்டு உள்ளது.

 ஈரான் - சீனா ஒப்பந்தம்

ஈரான் - சீனா ஒப்பந்தம்

ஈரான் - சீனா மத்தியிலான ஒப்பந்தத்தின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் இரு நாடுகளும் ரகசியமாக வைத்துள்ளது. ஆனாலும் இந்த ஒப்பந்தம் குறித்துச் சில முக்கியமான விஷயங்கள், கண்டிஷன்கள் வெளியாகியுள்ளது.

400 பில்லியன் டாலர் முதலீடு

400 பில்லியன் டாலர் முதலீடு

இதன் படி சீன அரசு, ஈரானின் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி துறையில் 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் 400 பில்லியன் டாலர் முதலீடு செய்யும். இதற்குப் பதிலாக ஈரான் அரசு சீனாவுக்கு ஈரானிய எண்ணெய்க்கான தள்ளுபடி விலையில் நிலையான விநியோகத்தை வழங்கும்.

ஈரான் தடை

ஈரான் தடை

இந்த ஒப்பந்தம் மூலம் சீனா தனது முதலீட்டு பாதையை மேற்கு ஆசியாவில் விரிவாக்கம் செய்து பெரிய விரிவாக்கத்தைச் செய்துள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறி பல வருடங்களாக விசாரணை, ஆய்வு செய்வதாகக் கூறி ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

ஈரான் திட்டம்

ஈரான் திட்டம்

இந்தியாவிடம் முதலீடுகளை ஈர்த்து தனது நாட்டின் வர்த்தகம், ஏற்றுமதி, வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்யும் பொருட்டு அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் சீனா உடன் போட்ட இதே போன்ற ஒப்பந்தத்தை இந்தியாவுக்கு ஈரான் வழங்கியுள்ளது.

ஈரான் அமைச்சர் அலி பகேரி கனி

ஈரான் அமைச்சர் அலி பகேரி கனி

ஈரானின் துணை வெளியுறவு துறை அமைச்சர் அலி பகேரி கனி கடந்த மாதம் தனது இந்திய பயணத்தின் போது அரசின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவுடன் பேசிய போது இந்த ஒப்பந்தம் குறித்த வாய்ப்பை உறுதிப்படுத்தினார். இந்தியா - ஈரான் மத்தியிலான ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இத்திட்டத்தை ஏற்றுள்ளது.

ஈரான் - இந்தியா

ஈரான் - இந்தியா

ஈரான் மீது சர்வதேச பொருளாதாரத் தடைகள் இருந்தாலும், இந்தியா பல வருடமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய்-ஐ வாங்கி வருகிறது. இந்த நிலையில் முதலீட்டு வாய்ப்பை அளித்தும் தள்ளுபடியில் நீண்ட காலக் கச்சா எண்ணெய் அளிக்கிறது என்பது ஜாக்பாட் தான்.

2வது லட்டு

2வது லட்டு

இந்தியாவுக்கு ஏற்கனவே ரஷ்யா 40 சதவீத தள்ளுபடி உடன் அதிகப்படியான கச்சா எண்ணெய் அளித்தும், ரூபாய் மதிப்பில் பேமெண்ட் செலுத்தினால் போதுமெனக் கூறி வரும் நிலையில் ஈரான் நீண்ட கால அடிப்படையில் தள்ளுபடியில் கச்சா எண்ணெய் அளிக்கத் தயாராக இருப்பது கண்ணா 2வது லட்டு தின்ன ஆசையா என் மைண்டு வாய்ஸ் கேட்பது போலத் தான் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+