மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் சூழ்நிலையில், ஈரான் இஸ்லாமிய களர்ச்சி காவல் படை (IRGC) ஹார்மூஸ் ஜலசந்தி மீது முழு கட்டுப்பாட்டை ஏற்றுள்ளதாக புதன்கிழமை அறிவித்துள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதையான இந்த நீர் வழிபாதையை, உலக எண்ணெய் விநியோகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.
ஈரானின் இந்த அறிவிப்பு உலக அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக தென் கொரியா, ஜப்பான், இந்திய சந்தைகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் Strait of Hormuz பாதுகாப்பு அளிப்பதாக கூறியும் ஈரான் இஸ்லாமிய களர்ச்சி காவல் படை கைப்பற்றியுள்ளது.

IRGC-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, IRGC கடற்படை அதிகாரி Mohammad Akbarzadeh கூறுகையில், "ஹார்மூஸ் ஜலசந்தி ஈரான் கடற்படையின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது" என்று தெரிவித்தார். இந்த பாதையில் செல்லும் எந்த கப்பலாக இருந்தாலும் ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களால் தாக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
2 நாட்களாக தாக்குதலின் சீற்றம் குறைந்த நிலையில் இந்த அறிவிப்பு மூலம் போரின் தீவிரத்தை அதிகரித்துள்ளதை காட்டுகிறது. ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக உலகின் 20% எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது. இது மூடப்பட்டால் உலக பொருளாதாரம் பெரும் அழுத்தத்தை சந்திக்கும்.
அமெரிக்காவின் பதிலடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், அமெரிக்க கடற்படை ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் டேங்கர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
டிரம்ப்-ன் அறிவிப்புக்கு பதிலடியாக ஈரானின் IRGC தலைவர் அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மீண்டும் இரு நாடுகளுக்கும் மத்தியிலான மோதலை விரிவடையச் செய்யலாம். ஈரான் ஏற்கனவே சில கப்பல்களை கைப்பற்றியுள்ளது.
உலக பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல்
ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டால், உலக எண்ணெய் விலை பயங்கரமாக உயரும் என அச்சம் உள்ளது, இதற்கு ஏற்றார் போல் கடந்த 5 நாட்களாக சராசரியாக 6 சதவீதம் உயர்ந்த வருகிறது. இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறும்.
ஏற்கனவே போர் காரணமாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான்-அமெரிக்கா மோதல் உலக அரசியலை பெரிதும் பாதித்து வருகிறது.
இன்றைய கச்சா எண்ணெய் விலை
இன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமான உயர்வை பதிவு செய்துள்ளன. WTI க்ரூட் ஒரு பேரலுக்கு $76.37 ஆக உயர்ந்து உள்ளது, இன்றைய வர்த்தகத்தில் $1.81 உயர்ந்து 2.43% அதிகரித்துள்ளது. Brent க்ரூட் விலை $83.61 ஆக உயர்ந்து, 2.71% வரையில் உயர்ந்து காணப்படுகிறது. அதேபோல், Murban க்ரூட் $82.12 என்ற நிலையை எட்டி, 2.68% வரையில் உயர்வை பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications