ஈரான் அரசு வரும் நவம்பர் 22ஆம் தேதி முதல் இந்தியர்களுக்கான விசா இல்லா நுழைவு வசதியை (Visa-Free Entry) முழுவதுமாக ரத்து செய்ய உத்தரவிட்டு உள்ளது. அதாவது சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இனி ஈரான் செல்லவோ அல்லது ஈரான் வழியாக வேறு நாடுகளுக்கு பயணம் செய்யவோ விசா கட்டாயமாக்கப்படுகிறது. இந்த முக்கிய மாற்றத்தை ஈரான் அரசு திடீரென அறிவிக்க முக்கியமான காரணம் உள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்திய இளைஞர்களுக்கு அதிக சம்பளத்துடன் வேலை வழங்குவதாக ஆசை காட்டி ஈரான் நாட்டுக்கு அழைத்துச் செல்லும் மோசடிகள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்கள் வழியாகவும், ஏஜெண்ட் வாயிலாகவும் இந்த போலி வேலை வாய்ப்புகள் வழங்கி இளம் இந்தியர்களை ஈர்க்கும் மோசடி நடத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய மோசடியை செய்யும் கும்பல், ஈரான் நாட்டில் இந்தியர்களுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்ற வசதியை தவறாக பயன்படுத்தி இந்தியர்களை ஈரான் எல்லைக்கு கொண்டு வந்த பிறகு அவர்களை கடத்தி பணம் பறிக்கும் கொடூர சம்பவங்கள் நடந்தி வருகின்றன. சிலரை மேற்கத்திய நாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்தப்பட்டு உள்ளனர்.
ஈரானுக்கு சென்ற இந்தியர்களில் பலர் அங்கு கடத்தப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் பணம் பறிக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினரிடம் மிரட்டி பணம் பெறுவது, உடல் ரீதியான துன்புறுத்தல் செய்வது போன்ற கொடுமைகள் நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தெரிவித்துள்ளன. இந்த கடத்தல் கும்பல்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதுக்குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில் ஈரான் அரசின் இந்த முடிவு இத்தகைய மோசமான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. வேலை தேடும் இளைஞர்களின் அவசரத்தை பயன்படுத்தி நடக்கும் இந்த மோசடுகளை முற்றிலுமாக தடுக்க இந்த நடவடிக்கை உதவும் என்று அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இனி ஈரான் செல்ல விரும்பும் இந்தியர்கள் முன்கூட்டியே விசா பெற்றுக்கொள்ள வேண்டும். ஈரான் தூதரகம் அல்லது ஆன்லைன் மூலமாக விசா விண்ணப்பிக்கலாம். ஈரான் வழியாக ஐரோப்பா அல்லது வேறு நாடுகளுக்கு செல்லும் டிரான்சிட் பயணிகளுக்கும் விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் வாயிலாக வரும் அனைத்து இந்திய பயணிகளுக்கும் கூடுதல் பாதுக்காப்பு அளிக்கப்பட உள்ளது.
மேலும் போலி வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பி யாரும் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் மத்தி வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியர்களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்புகளை தடுக்க ஈரான் அரசு எடுத்துள்ள இந்த முடிவு, வெளிநாட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
More From GoodReturns

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய புது சலுகை: விமான டிக்கெட் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications