பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி இன்று வரை 10 நாட்களுக்கும் மேலாக ஈரானில் போர் நீடிக்கிறது. குண்டு வீச்சுகள் மற்றும் ஏவுகணை சத்தங்களுக்கு நடுவே உயிரை கையில் பிடித்துக் கொண்டு சாமானிய மக்கள் ஒவ்வொரு நொடியையும் அச்சத்துடனே கடந்து வருகின்றனர். ஈரான் போர் நேரடியாகவும் மறைமுகமாகவும் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் திடீரென ஈரான் மீது போரை தொடங்கின. இந்த போரில் ஈரானின் உச்சபட்ச தலைவரும் ஷியா பிரிவு இஸ்லாமியர்களுக்கான தலைவராக திகழ்ந்தவருமான அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அமெரிக்காவும் இஸ்ரேல் ராணுவமும் நடத்திய வான்வழி தாக்குதலில் கமேனியின் ஒரு மகனை தவிர மொத்த குடும்பமும் கொல்லப்பட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ராணுவம் இஸ்ரேல் நாட்டின் மீதும் அண்டை நாடுகளில் இருக்கக்கூடிய அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் கட்டடங்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் போர் உலகம் முழுவதுமே பெரிய அளவிலான எரிசக்தி பிரச்சனையை உண்டாக்கியிருக்கிறது. தற்போதைக்கு போர் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை.
அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து அவருடைய மகனான மொஜ்தப் கமேனியை நாட்டின் புதிய தலைவராக தேர்வு செய்தனர். அவர் விரைவில் நாட்டின் உயர் தலைவர் பொறுப்பை ஏற்பார் என்றும் ஷியா பிரிவு இஸ்லாமியர்களுக்கான தலைவராக செயல்படுவார் என்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
ஆனால் தற்போது ஈரானில் இருக்கக்கூடிய அரசு ஒரு பயங்கரவாத அரசு இந்த அரசு யாரை தலைவராக நியமனம் செய்தாலும் அவர்களை கொல்வோம் என பகிரங்கமாக சூளுரைத்தது இஸ்ரேல். இந்த சூழலில் ஈரான் நாட்டின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமேனியின் மகனான மொஜ்தப் கம்பெனி மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி இருப்பதும் இந்த தாக்குதலில் அவர் காயமடைந்து இருப்பதும் தற்போது உறுதியாக இருக்கிறது. ஈரான் நாட்டு செய்தி ஊடகம் மொஜ்தப் கமேனியை Jaanbaz of Ramadan எனக் குறிப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
அதாவது Jaanbaz of Ramadan என்றால் போரில் காயமடைந்தும் நாட்டுக்காக சேவை செய்பவர் என அர்த்ததமாம். அந்த வகையில் மொஜ்தபா கமேனியும் இந்த போரில் காயமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மொஜ்தபாவும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ஈரான் அரசு அதனை மறுத்துள்ளது.
இதற்கிடையே மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் ரஷ்யா தீவிரமாக இருக்கிறது, இந்த பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதற்கு தயார் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருக்கிறார். அமெரிக்காவும் ஈரானும் இதனை ஏற்கும் பட்சத்தில் சற்றே போர் பதற்றம் தணிய வாய்ப்புள்ளது.
More From GoodReturns

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!



Click it and Unblock the Notifications