ஈரான் தலைவர் கமேனி படுகொலை: சூறையாடப்பட்ட அமெரிக்க தூதரகங்கள்..!! தீவிரமடையும் மோதல்..!!

30 ஆண்டுகளுக்கு மேலாக ஈரானில் அசைக்க முடியாத தலைவராக இருந்தவர் தான் அயத்துல்லா அலி கமேனி. ஈரான் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்களால் தங்களின் ஆஸ்தான மதகுருவாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். இதனால் அவர் படுகொலை செய்யப்பட்டது உலகம் முழுவதுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய கூட்டு ராணுவ நடவடிக்கையில் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மரணம் ஒருபுறம் மக்களுக்கு கண்ணீரை வரவழைத்திருக்கிறது, ஒரு தரப்பினரோ இதனை கொண்டாடுகின்றனர். ஒரு தரப்பினரோ ஆர்ப்பாட்டங்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

ஈரான் தலைவர் கமேனி படுகொலை: சூறையாடப்பட்ட அமெரிக்க தூதரகங்கள்..!! தீவிரமடையும் மோதல்..!!

உலக அளவில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய நாடு தான் ஈரான். இந்த ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் முக்கியமான மதகுருவாக திகழ்ந்தவர் தான் அயத்துல்லா அலி கமேனி. 1979 ஆம் ஆண்டு ஈரானில் மிகப்பெரிய புரட்சி நடைபெற்றது. இந்த இஸ்லாமிய புரட்சி அடுத்து மன்னர் ஷா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். அவருக்கு அடுத்து ருடால்ப் கொமேனி ஆட்சியை கைப்பற்றினர்.

ஈரானில் இஸ்லாமிய விதிமுறைகள் படி ஆட்சி அமைக்கப்பட்டு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. அப்போது கமேனி நாட்டின் அரசியல் மற்றும் ராணுவ அதிகாரத்தின் முக்கிய அதிகாரம் கொண்டவராக இருந்தவர். ருடால்பின் மரணத்தை அடுத்து நாட்டின் மதகுருவாக மாறினார். ஈரான் மக்களில் ஒரு பிரிவினர் அவருடைய ஆட்சியை வரவேற்றனர், ஒரு பிரிவினர் அவருடைய ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே ஈரானில் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கிறது விலைவாசி உயர்ந்து விட்டது வேலை வாய்ப்புகளே இல்லை என பல்வேறு காரணங்களை கூறி ஈரான் நாட்டு மக்கள் பலகட்ட போராட்டங்களை அவ்வப்போது நடத்தி வந்தனர். இந்த போராட்டங்களை தூண்டி விடுவது அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் என கமேனி நேரடியாகவே குற்றம் சாட்டி வந்தார். இந்த நிலையில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானில் போராட்டம் நடத்தும் மக்களுக்கு ஆதரவளிக்கு தயார் என பகிரங்கமாகவே அறிவித்தார்.

ஈரான் மீது அமெரிக்கா இவ்வளவு கோபமாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஈரான் வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் மற்றும் அணுசக்தி திட்டங்கள் தான், ஈரானிடம் அணு ஆயுதங்களும் அணுசக்தி திட்டங்களும் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பது உலகத்திற்கே ஆபத்தானது எனக் கூறி வந்த அமெரிக்கா ஒருபுறம் பேச்சுவார்த்தையும் நடத்தி கொண்டே மறுபுறம் தாக்குதலையும் நடத்திவிட்டது.

ஈரான் தலைவர் கமேனி படுகொலை: சூறையாடப்பட்ட அமெரிக்க தூதரகங்கள்..!! தீவிரமடையும் மோதல்..!!

ஒவ்வொரு முறையும் அமெரிக்கா, இஸ்ரேலின் ஸ்கெட்சில் இருந்து தப்பிய கமேனி இந்த முறை சிக்கி கொண்டார். கமேனியின் திடீர் மரணம் ஈரான் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏராளமான மக்கள் கமேனியின் மரணத்தை அடுத்து கண்ணீர் மல்க டெஹ்ரான் தெருக்களில் மக்கள் பேரணியாக சென்றுள்ளனர். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் நிரம்பியுள்ளன.

இது ஒரு புறம் இருக்க இதே ஈரானில் கமேனியின் மரணத்தை எதிர் தரப்பினர் பட்டாசு வெடித்தும் கொண்டாட கூடிய வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கின்றன. கமேனியின் மரணம் ஒரு சாராருக்கு கண்ணீரையும் ஒரு தரப்புக்கு கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையே அமெரிக்காவின் செயலை கண்டித்து பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். கமேனி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானில் உள்ள ஷியா பிரிவினர் கராச்சி நகரிலுள்ள அமெரிக்க துணை தூதரகத்தை அடித்து நொறுக்கினர். அப்போது போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முயன்று அமெரிக்க ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் எட்டு பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கே பதட்டமான சூழல் ஏற்பட்டது.

ஈரான் தலைவர் கமேனி படுகொலை: சூறையாடப்பட்ட அமெரிக்க தூதரகங்கள்..!! தீவிரமடையும் மோதல்..!!

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் ஒரு பகுதியில் செயல்படக்கூடிய ராணுவப் பள்ளி, எஸ்பி அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். ஈராக்கின் பாக்தாத்தில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டிருக்கிறது அமெரிக்க தூதரகத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்த தூதரக ஊழியர்கள் தப்பி வெளியேறியதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

இந்தியாவிலும் காஷ்மீரில் உள்ள ஷியா இஸ்லாமியர்கள் சார்பாக பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஸ்ரீநகர் மற்றும் பார்முலா பகுதிகளில் ஷியா இஸ்லாமியர்கள் தான் ஏராளமாக வசிக்கின்றனர். கமேனியின் மரண செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இங்கே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீரின் பல இடங்களில் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. சில பகுதிகளில் மக்கள் கருப்புக் கொடிகளை ஏந்தி துக்கம் அனுசரித்தனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+