மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனி மீது இஸ்ரேல் - அமெரிக்க படைகள் திட்டமிட்டு செய்த தாக்குதலில் காயமடைந்திருக்கலாம் என்ற தகவல் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரிட்டிஷ் நாளிதழ் தி சன் வெளியிட்ட செய்தியில், மொஜ்தபா கமேனி அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் படுகாயமடைந்து காலை இழந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

பீட் ஹெக்செத் கூறுகையில், சமீபத்திய தாக்குதல்களில் மொஜ்தபா காமெனெய் காயமடைந்து இருக்கக்கூடும் என்றும், அந்த தாக்குதலால் அவருக்கு கடுமையான உடல் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக ஈரான் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், போர் சூழ்நிலையில் இது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஈரான், அமெரிக்க படைகளையும், இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் பீட் ஹெக்செத்-ன் இந்த பேச்சு ஈரான் தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் இதுவரை 15,000க்கும் மேற்பட்ட முக்கிய இலக்குகளை தாக்கியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் மூலம் ஈரானின் ராணுவ அமைப்புகள் மற்றும் முக்கிய பாதுகாப்பு கட்டமைப்புகளை தாக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகையில், இந்த தாக்குதல்கள் ஈரானின் ராணுவ திறன் பெரிதும் பாதித்துள்ளன. இதனால் அந்த நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த போர் எந்த வேகத்தில் நடைபெறும், எப்போது தாக்குதல்கள் அதிகரிக்கும் என்பதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்மானிப்பார் என ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இனி வரும் காலத்தில் நடைபெறும் தாக்குதல்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்கலாம் என்றும், ஈரானின் முக்கிய ராணுவ திறன்களை முழுமையாக செயலிழக்கச் செய்வதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா ஈரான் மீதான இந்த தாக்குதலை 'ஆபரேஷன் ஃப்யூரி' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications