இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தெற்கு இஸ்ரேலின் டிமோனா மற்றும் அராட் நகரங்களை ஏவுகணை தாக்குதல் மூலம் தாக்கியது.
டிமோனாவில் இஸ்ரேலின் முக்கிய அணு சக்தி தளம் அமைந்துள்ளதால் இந்த தாக்குதல் புது அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதற்கும் இஸ்ரேல் தொடுத்த தாக்குதல் காரணம் என ஈரான் கூறுகிறது.
ஈரானின் இந்த தாக்குதில் இஸ்ரேலில் குறைந்தது 180 பேர் காயமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அராட் மற்றும் டிமோனாவில் பெரும் சேதம்
அராட் (Arad) நகரில் 116 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்நகர மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. டிமோனாவில் (Dimona) 64 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். பல வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன. ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட ஷார்ப்னல் மூலம் பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இஸ்ரேல் பதிலடி உறுதி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானின் இந்த திடீர் தாக்குதல் மற்றும் பாதிப்பை கண்டு அதிர்ச்சி அடைந்து இதை "கடினமான இரவு" என்று குறிப்பிட்டார். ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை தொடருவோம் என்று உறுதியளித்தார்.
பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் குறைந்தது 200 குழந்தைகளாக உள்ளனர்.
இஸ்ரேல் வான்பாதுகாப்பு தோல்வி
இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஈரானின் ஏவுகணை தாக்குதலின் போது இஸ்ரேலின் பெருமைக்கு உரிய Iron Dome வான்பாதுகாப்பு அமைப்புகள் இயக்கப்பட்டன. ஆனால் சில ஏவுகணைகள் தடுக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடான்ஸ் அணு வசதி மீது தாக்குதல்
ஈரான் தனது நடான்ஸ் அணு செறிவூட்டல் (Natanz nuclear enrichment complex) வசதி மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறியது. ஆனால் கதிரியக்க கசிவு இல்லை என்று தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தான் அராட் (Arad) மற்றும் டிமோனாவில் (Dimona) தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய இஸ்ரேல் அதிகாரி ஒருவர், நடான்ஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பல்ல என்று மறுத்தார். இஸ்ரேல் ராணுவம் இது குறித்து முழு அறிக்கையை இதுவரையில வெளியிடவில்லை. அமெரிக்க தரப்பிலும் இதுக்குறித்து விளக்கம் கொடுக்கவில்லை.
தெஹ்ரான் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம்
இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை தெஹ்ரானின் மாலெக் அஷ்தார் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தாக்கியதாக அறிவித்தது. இந்த மையம் அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான பாகங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. "ஈரான் அணு ஆயுதம் பெற அனுமதிக்க மாட்டோம்" என்று இஸ்ரேல் ராணுவம் உறுதியளித்தது.
கடந்த 2 நாள் தாக்குதல்கள் போரை புதிய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன. ஆம் முதல் கட்டமாக ஈரான் தலைவர்கள் மற்றும் அவர்களது இருப்பிடம் மட்டுநே தாக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்கள் மீது ஈரான் - இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் தற்போது இரு நாடுகளும் அணு சக்தி தளங்களை குறிவைத்து தாக்க துவங்கியுள்ளது. ஈரானில் Natanz, இஸ்ரேலில் Dimona பகுதிகளில் தாக்குதல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு தரப்பும் அணு வசதிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்களுக்கு இது பொருளாதாரம், எரிசக்தி விலை உயர்வு, பாதுகாப்பு அச்சம் போன்றவற்றை தாண்டி புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

தொடர்கிறது ஈரான் போர்!! நாளை காலை 10 மணிக்கு தரமான சம்பவம் காத்திருக்கிறது என அறிவித்த டிரம்ப்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

பெட்ரோல் விலை ரூ.119, டீசல் விலை ரூ.127..!! இந்த மாத கடைசியில் அதிர்ச்சி காத்திருக்கு மக்களே!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!



Click it and Unblock the Notifications