இஸ்ரேல் உடன் சேர்ந்து ஈரான் நாட்டில் ஏவுகணை தாக்குதல் செய்யும் அமெரிக்காவுக்கு எதிராக பெரும் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது ஈரான். இந்த நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சகம், இஸ்ரேல் தாக்குதல்கள் நாட்டின் "ஒருமைப்பாடு மற்றும் தேசிய இறையாண்மையை" குறிவைத்துள்ளதாக குற்றச்சாட்டியுள்ளது.
மேலும் இஸ்ரேல் ஈரான் நாட்டில் பாதுகாப்பு உள்கட்டமைப்பு இல்லாத மற்றும் ராணுவம் இல்லாத இடங்கள் குறிவைத்து பல்வேறு நகரங்களில் திட்டமிட்டு தாக்கியுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் கிளர்ச்சி காவல் படை (IRGC) இஸ்ரேல் நோக்கி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

மேலும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் அமெரிக்க படைகள் நிலை கொண்டுள்ள கத்தார், பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் பகுதிகளை குறிவைத்து தாக்க துவங்கியுள்ளது. பஹ்ரைனில் அமெரிக்க கடற்படையின் 5ஆவது கடற்படை தலைமையகம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கத்தார் பாதுகாப்பு அமைச்சகம், ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை தற்காப்பு அமைப்பு வெற்றிகரமாக எதிர் தக்குதல் நடத்தி தடுத்ததாக கூறியுள்ளது. ஆனால் தோஹாவில் பல குண்டு வெடிப்புகள் கேட்டதாக அல்ஜசிரா தெரிவித்துள்ளது.

இதேபோல் அபுதாபியில் பெரும் குண்டுவெடிப்பு ஒலி கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. இணைய கண்காணிப்பு நிறுவனம் நெட்ப்ளாக்ஸ், ஈரானில் "மொத்த இணைய துண்டிப்பு" நிலவுவதாக அறிவித்துள்ளது.
மொத்தத்தில், ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்து வருகின்றன. இந்த தாக்குதல் மத்திய கிழக்கு அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. உலக நாடுகள் இந்த நிலைமையை கவனமுடன் அவதானித்து வருகின்றன.
இதோடு தற்போது இஸ்ரேல் தலைநகாரன டெல் அவிவில் குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன.


Click it and Unblock the Notifications