ஈரான் ராணுவம் புதன்கிழமை கடுமையான எச்சரிக்கை விடுத்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. உலக நாடுகள் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 200 டாலர் தாண்டும் என அறிவித்து, அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று ஈரான் கூறியுள்ளது.
ஈரான் கடற்படை ஹார்மூஸ் நீர்வழிப்பாதையில் நேற்று மூன்று கப்பல்களை தாக்கியுள்ளது. 1970களின் எண்ணெய் நெருக்கடிக்கு பிறகு உலக எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய போக்குவரத்து தடை தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக ஈரான் கைப்பற்றியது மூலம் நடந்துள்ளது.

இந்த நிலையில் டிரம்ப்-ன் தொடர் மிரட்டலுக்கு மத்தியில் ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் Ebrahim Zolfaqari, "வளைகுடா பகுதியில் பாதுகாப்பு சீர்குலைக்கப்பட்டுள்ளது. எனவே எண்ணெய் விலை 200 டாலர் அளவை தாண்டும். அதற்கு தயாராக இருங்கள்" என்று அமெரிக்காவை நோக்கி கூறியுள்ளார்.
ஈரான் தெஹ்ரானில் உள்ள வங்கி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் வர்த்தகம் செய்யும் வங்கிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார் Ebrahim Zolfaqari. மத்திய கிழக்கில் உள்ள மக்கள் வங்கிகளிலிருந்து 1,000 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதனால் கூடுதல் பதற்றம் உருவாகியுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களும், மிரட்டல்களுக்கும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது, ஈரானில் புதிய தலைவர் நியமிக்கப்பட்ட பின்பு ஈரான் ராணுவ படையின் பதிலடி தாக்குதல்கள் அதிகமாக செய்து நடத்தி வருகிறது. நேற்று துபாய் விமான நிலையத்திற்கு அருகில் 2 டிரான் விபத்து நடந்தது.
ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை 85-100 டாலருக்கு மத்தியில் வர்த்தகம் செய்யப்பட்டு வரும் வேளையில், ஈரானின் 200 டாலர் மிரட்டலுக்கு பின்பு 90 டாலர் அளவில் வர்த்கமாகி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு ஒருப்பக்கம் உலக நாடுகளை கடுமையாக பாதித்து வரும் வேளையில், சப்ளை தடைப்பட்டு உள்ளது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலைமை இந்தியாவுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்தியாவில் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீத வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை. ஹார்முஸ் வழி பாதிக்கப்பட்டதால் தற்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் மட்டும் அல்லாமல் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
மொத்தத்தில், ஈரான் எண்ணெய் ஏற்றுமதியை தடுக்கும் என்று எச்சரித்துள்ளது. ஹார்முஸ் முழு தடை ஏற்பட்டால் எண்ணெய் $200-ஐ தாண்டும். இது உலக பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும். இந்தியா போன்ற நாடுகள் மாற்று எண்ணெய் ஆதாரங்களை தேட வேண்டும். உலக நாடுகள் இந்த பதற்றத்தை தீர்க்க முயற்சி செய்ய வேண்டிய நேரம் இது. மக்கள் எரிபொருள் செலவுகளை கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
More From GoodReturns

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?



Click it and Unblock the Notifications