ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மத்தியிலான மோதல் 12ஆம் நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) அடுத்த முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ கட்டமைப்புகளையும், இஸ்ரேல் எல்லைகளையும் தாக்கி வரும் ஈரான், அடுத்தாக தனது டார்கெட்-ஐ அமெரிக்காவின் கைவைக்க IRAN முடிவு செய்துள்ளது.
ஈரான் நாட்டின் முக்கிய மற்றும் சக்தி வாய்ந்த ராணுவ படையாக இருக்கும் IRGC "அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய வங்கிகள் மற்றும் பொருளாதார மையங்களை தாக்குவோம்" என்று தெரிவித்துள்ளதால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் - அமெரிக்க படைகள் ஈரான் வங்கி ஒன்றின் மீது தாக்கப்பட்டதாக கூறிய ஈரான், இந்த புதிய எச்சரிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் வளைகடா நாடுகளிலும், இஸ்ரேலிலும் இருக்கும் அமெரிக்க டெக் நிறுவனங்களும், ஊழியர்களும் பீதியில் உள்ளனர்.
IRGC-க்கு சொந்தமான கட்டுமான நிறுவனமான Khatam al-Anbiya நிறுவன தலைமையக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "எதிரி எங்கள் கைகளை புதிய இலக்குக்களை தாக்குவதற்கு திறந்துவிட்டு உள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு தொடர்புடைய வங்கிகள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது இனி டார்கெட் செய்து தாக்குதல் நடத்தப்படும்" என்று கூறியுள்ளார்.
இந்த எச்சரிக்கையில், வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு தொடர்புடைய வங்கிகளுக்கு 1 கிலோமீட்டர் தூரத்திற்கு மக்கள் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. "அமெரிக்கர்கள் எங்கள் பதிலடிக்காக காத்திருக்கட்டும். வலிமிகுந்த பதிலடி அளிப்போம்" என்று IRGC தெரிவித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மத்தியிலான போர் பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கியது முதல், அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களால் 10,000க்கும் மேற்பட்ட சாமானிய மக்கள் நிறைந்த இடங்கள் தாக்கப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. இந்த தாக்குதல் மூலம் 1,300க்கும் மேற்பட்ட ஈரானிய மக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஸ்னிம் செய்தி நிறுவனம் (IRGC தொடர்புடையது) அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அலுவலகங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் இனி ஈரானின் புதிய இலக்குகளாக பட்டியலிட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இதில் கூகுள், மைக்ரோசாஃப்ட், பாலன்டிர், ஐபிஎம், என்விடியா, ஒரக்கிள் போன்ற நிறுவனங்கள் லிஸ்டில் அடங்குகின்றனர். இந்த நிறுவனங்கள் ராணுவ பயன்பாட்டிற்கு தொழில்நுட்பம் வழங்குவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் இரண்டும் மத்திய கிழக்கில் பல அலுவலகங்களை கொண்டுள்ளன. கூகுளின் மத்திய கிழக்கு தலைமையகம் துபாயில் உள்ளது. இதேபோல் மைக்ரோசாஃப்ட் ஐக்கிய அரபு அமீரக தலைநகரில் முக்கிய அலுவலகம் கொண்டுள்ளது.
இவ்விரு நிறுவனங்களும் இஸ்ரேலில் அலுவலகங்கள் கொண்டுள்ளன. இந்த எச்சரிக்கை போர் நீடித்தால் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!



Click it and Unblock the Notifications