ஈரான்- அமெரிக்கா - இஸ்ரேல் மத்தியிலான தாக்குதல் குறைந்தாலும், பதற்றம் சற்றும் குறையவில்லை. இந்த தாக்குதலும், பதற்றமும் சர்வதேச கச்தா எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையை பெரிதும் பாதித்து வருகிறது. இந்த போரின் துவக்க நாட்களில் விலை மட்டுமே உயர்ந்து வந்த நிலையில் தற்போது சப்ளை பாதிப்பு, சேவை முடக்கம் என அடித்தடுத்து பிரச்சனைகள் வெடிக்க இந்தியாவில் துவங்கியுள்ளது.
வளைகுடா நாடுகளில் இருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு-க்கு ஹார்முஸ் ஜலசந்தி முக்கிய நுழைவு வாயிலாக இருக்கும் நிலையில், தற்போது இந்த வழியாக செல்லும் கப்பல்களை ஈரான் படைகள் தாக்கி வருகிறது.

டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்து தடைபட்டால், ஈரானை "இதுவரை அடிக்கப்பட்டதை விட 20 மடங்கு கடுமையாக தாக்குவோம்" என்று ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் IRGC படை முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) இன்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய நினைத்தால், "ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்க மாட்டோம்" என்று IRGC படையின் செய்தித் தொடர்பாளர் ஈரான் அரசு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த போரின் முடிவை ஈரானே தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த எச்சரிக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்புக்கு பதிலடியாக வந்துள்ளது.
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் செய்த பதிவில் ஈரான் மீது 20 மடங்கு அதிக தாக்குதலை அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் செய்யும் என மிரட்டல் விடுத்தது மட்டும் அல்லாமல் ஈரானை மீண்டும் கட்டமைக்க முடியாத அளவுக்கு அழித்துவிடுவோம் என்றும் எச்சரித்துள்ளார். இருப்பினும், இது நடக்காமல் இருக்க வேண்டும் என்றும், இது சீனா உள்ளிட்ட ஹார்முஸ் வழியை பயன்படுத்தும் நாடுகளுக்கு அமெரிக்காவின் பரிசு இது என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
டிரம்ப்-ன் இந்த பதிவுக்கு பின்பும் IRGC செய்தித் தொடர்பாளர் ஈரான் அரசு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்து மீண்டும் வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப்-ன் பதிவால் தடாலடியாக உயர்த்த கச்சா எண்ணெய் விலை இன்று மீண்டும் பழைய நிலைக்கே திருப்பியது குறிப்பிடத்தக்கது.
மேலும் டிரம்ப் தனது பதிவில் தேவை ஏற்பட்டால் கச்சா எண்ணெய் தொடர்பான தடைகளை தளர்த்தவும், அமரிக்க கடற்படை பயன்படுத்தி கச்சா எண்ணெய் டாங்கர்கள் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், Strait of Hormuz வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்க கடற்படை மற்றும் அதன் கூட்டணி நாடுகளும் தயார் நிலையில் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார். அவ்வாறு பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலை உருவாகாது என்று நம்புகிறேன், ஆனால் தேவைப்பட்டால் கப்பல்களை பாதுகாப்பாக அந்த கடல் வழியாக கொண்டு செல்வோம் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். இந்நிலையில், ஈரான் தொடர்பான போர் சூழ்நிலை "விரைவில் மாறிவிடும்" என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கை தான் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையில் ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமெனியை நியமித்துள்ளது அந்நாட்டின் உயர்மட்ட அரசு நிர்வாக குழு. இது ஈரானின் கடுமையான நிலைப்பாடு தொடரும் என்பதைக் காட்டுகிறது. IRGC படை மொஜ்தபா கமெனி-க்கு முழு ஆதாரவையும் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை போரை மேலும் நீட்டிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

Israel ரத்த வெள்ளம், Iran குறிவைத்த அணுசக்தி தளம்! முடங்கிய Iron Dome - அதிர்ச்சியில் நெதன்யாகு சொன்ன வார்த்தை

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!



Click it and Unblock the Notifications