சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் அதிரிவுகள் ஏற்பட்டுள்ளது. ஈரான் மற்றும் IRGC ராணுவ படை வெளியிட்டுள்ள புதிய எச்சரிக்கை காரணமாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை புதன்கிழமை 4 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு பேரல் விலை 107 டாலரை தாண்டியுள்ளது. இது உலக அளவில் எரிபொருள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளது.
ஈரானின் எச்சரிக்கைக்கு முக்கிய காரணம் இஸ்ரேல் செய்த முக்கிய தாக்குதல். ஈரான் நாட்டின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயலில் இஸ்ரேல் செய்த தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் இது கத்தார் நாட்டுடன் தொடர்புடைய எரிவாயு வயலில். இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் - அமெரிக்க படைகள் ஈரான் சொத்துக்களை தாண்டி ஈரானுக்கு தொடர்புடைய சொத்துக்களையும் தாக்க துவங்கியுள்ளது மூலம் புது பதற்றம் உருவாகியுள்ளது.

ஈரானின் அரசு ஊடகங்கள் தெரிவித்தபடி, ஈரானின் மிகப்பெரிய எரிவாயு வயலான தெற்கு பார்ஸ் (South Pars) தளத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடந்துள்ளது. இந்த எரிவாயு வயல் கத்தார் நாட்டுன் பகிர்ந்து கொள்ளப்படும் உலகின் மிகப்பெரிய எரிவாயு வளமாகும்.
இந்த தாக்குதலுக்கு காரணமான இஸ்ரேலை கத்தார் வெளியுறவு அமைச்சகம் கடுமையாக விமர்சனம் செய்து கண்டனம் தெரிவித்துள்ளது. கத்தார் வெளியுறவு அதிகாரி மஜித் அல்-அன்சாரி இதை ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கை என்று விமர்சித்துள்ளார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இந்த தாக்குதலுக்கு பதிலடியாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள ஐந்து முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்களுக்கு அருகில் வசிப்பவர்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சவுதியின் சம்ரெஃப் சுத்திகரிப்பு நிலையம், ஜுபைல் பெட்ரோ கெமிக்கல் வளாகம், யுஏஇ-யின் அல் ஹசன் எரிவாயு வயல், கத்தாரின் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவை ஈரானின் புதிய டார்கெட் ஆக மாறியுள்ளது. ஈரான் நாட்டின் இந்த எச்சரிக்கை எரிபொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இதன் எதிரொலியார புதன்கிழமை பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4.53 டாலர் உயர்ந்து $107.95-ஆக உள்ளது. அன்று அதிகபட்சமாக $108.60 வரை சென்றது. அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் 1.91 டாலர் உயர்ந்து 98.12 டாலராக உள்ளது.
கடந்த நான்கு நாளாக பிரெண்ட் விலை 100 டாலரை தாண்டி வர்த்தகமாகி வருகிறது. இதன் மூலம் போர் முடிவடையும் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை பெருமளவு மத்திய கிழக்கிலிருந்து செய்கின்றன. விலை உயர்வு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தும். சில நாடுகளுக்கு முன்பு தான் ஈரான் இந்திய கப்பல்களுக்கு ஹார்மூஸ் வழித்தட்டத்தில் பயணிக்க ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது புது பிரச்சனை உருவாக்கியுள்ளது.
இந்த போர் தீவிரமடைவதால் உலகம் முழுவதும் எரிபொருள் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களும், அதன் பதிலடி அச்சுறுத்தல்களும் தொடர்ந்தால் எண்ணெய் விலை அடுத்த ஓரிரு நாட்களில் 110 டாலரை தாண்டி செல்லலாம்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய புது சலுகை: விமான டிக்கெட் விலை குறையுமா?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

கிடுகிடுவென உயரும் விமான டிக்கெட் கட்டணங்கள்: ஈரான் போர் தான் காரணமா?



Click it and Unblock the Notifications