ஈரான்-அமெரிக்கா இடையே ராணுவ மோதல் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய அரசு ஈரானில் இருக்கும் இந்திய குடிமக்களுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே அமெரிக்க அரசு ஈரான் நாட்டை சுற்றி போர் கப்பல்களையும், போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரான் நாட்டை தாக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
ஈரானில் இருக்கும் இந்தியர்கள் (மாணவர்கள், வியாபாரிகள், சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் என அனைவரும்) உடனடியாக விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விதிமான போக்குவரத்து வசதிகளையும் பயன்படுத்தி நாடு திரும்புமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஜனவரி 5, 2026 அன்று வெளியான அறிவிப்பின் தொடர்ச்சியாக பிப்ரவரி 23, 2026 அன்று டெஹ்ரான் இந்திய தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அமெரிக்க அதிபரின் கெடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு சம்மதிக்க 10-15 நாட்கள் கெடு விதித்துள்ளார். இல்லையெனில் அது ஈரானுக்கு ஆபத்து என எச்சரித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்தில் உள்ளது.
அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பிப்ரவரி 26 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் என ஓமான் வெளியுறவு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். ஓமான் ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வருகிறது.
இந்தியர்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகள்
ஜனவரி 14, 2026 அறிவிப்பை மீண்டும் வலியுறுத்திய இந்திய தூதரகம், இந்தியர்கள் போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடங்களை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளது. உள்ளூர் ஊடகங்களை கண்காணித்து, வெளியில் நடக்கும் சம்பவங்களை தெரிந்துகொள்ள அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பயண மற்றும் இமிக்ரேஷன் தேவைக்கான பாஸ்போர்ட், அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
இதோடு ஈரானில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும், இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும், அப்படி செய்யாதவர்கள் (https://www.meares.com/request/home) இந்த இணைப்பில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஈரானில் இண்டர்நெட் இணைப்பில் பிரச்சனை ஏதும் இருந்தால், இந்தியாவில் உள்ள குடும்பத்தினர் தூதரக இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. .
ஈரானில் உள்ள இந்தியர்கள் எந்த உதவியும் தேவைப்பட்டால், இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். அவசர தொலைபேசி எண்கள்: +989128109115, +989128109109, +989128109102, +989321793599. இமெயில்: [email protected]. தூதரக இணையதளத்தில் பதிவு செய்யவும். இந்த நடவடிக்கைகள் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications