ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் ராணுவ தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக பொருளாதாரம் பெரும் அழுத்தத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது என அனைவரும் கூறிவருகின்றனர். ஆனால் இதன் உண்மையான தாக்கம் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் தற்போது போரில் மூழ்கியிருக்கும் காரணத்தால் பங்குச்சந்தை, தங்கம், வெள்ளி, காப்பர் அனைத்தும் பெரும் சரிவில் தத்தளித்து வருகிறது. மறுமுனையில் பல ஆண்டுகளாக அமைதியாக இருந்த கச்சா எண்ணெய், எரிவாயு சந்தை தற்போது முழுவீச்சில் செயல்பட துவங்கியுள்ளது. இந்த போரின் காரணமாக கச்சா எண்ணெய் ஒரு பேரல் 100 டாலரை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இப்போரில் ஈடுப்பட்டுள்ள முக்கிய நாடுகளான ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போன்றவற்றை காட்டிலும் முதலில் பெரிய அளவில் சிதைவை சந்திக்கும் பொருளாதாரம் ஜப்பான் தான் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹார்முஸ் ஜலசந்தி மூடல் மூலம் தான் இது நடக்கும் எனவும் கணக்கிட்டு உள்ளனர். ஜப்பானின் எண்ணெய் கொள்முதல் முறை, கடன் சுமை போன்றவை அந்நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் அபாயத்தை அதிகரிக்கின்றன.
ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி என்பது வெறும் 33 கிலோமீட்டர் அகலம் கொண்ட ஒரு கடல் பாதை, ஆனால் இந்த பாதையில் உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்துக்கு வழிவகுக்கிறது. ஈரான் இதை மூடுவதாக அறிவித்துள்ளது.இதனால் உலக எண்ணெய் விநியோகம் தடைப்பட்டு, விலை பயங்கரமாக உயரும். ஜப்பானுக்கு இது பெரும் அடியாக இருக்கும்.
ஜப்பான் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதம் மத்திய கிழக்கில் இருந்து வருகிறது, அதில் 75 சதவீதம் ஹார்முஸ் வழியாகத்தான். இந்த பாதை மூடப்பட்டால், ஜப்பான் எரிசக்தி தேவைக்கு பெரும் முட்டுக்கட்டை விழும், இது தான் அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் முதல் படியாக இருக்கும்.
ஜப்பானின் பொருளாதார பலவீனங்கள்
ஜப்பான் பொருளாதாரம் ஏற்கனவே பல சவால்களை சந்திக்கிறது. உலகின் மிக உயர்ந்த கடன் சுமை (GDP-யின் 230 சதவீதம்) கொண்ட நாடு. மக்கள் தொகை சுருங்கி வருகிறது, எரிசக்தி சார்பு அதிகம், அந்நாட்டின் பாதுகாப்புக்காக அமெரிக்காவுடன் கூட்டணி, வர்த்தகத்திற்காக சீனாவுடன் கூட்டணி எப்படி மொத்த நாடும், பொருளாதாரமும் மற்ற நாடுகளை மட்டுமே நம்பிக்கொண்டு ஜப்பான் சிக்கியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் ஹார்முஸ் நீர் வழிபாதை மூடல், எரிசக்தி அழுத்தம், கடன் சுமை, தொழில்துறை போட்டி என அனைத்தும் ஒன்றாக இணைந்து 'முழுமையான புயல்' போல் அன்நாட்டின் பொருளாதாரத்தை அழிவை நோக்கி நகர்த்தலாம் என கணிக்கப்படுகிறது. சில பொருளாதார நிபுணர்கள், ஜப்பான் GDP 3 சதவீதம் சரியலாம் என்று கணிக்கின்றனர். இது ஜப்பானுக்கு பெரும் பொருளாதார நெருக்கடியாக மாறும்.
உலக பொருளாதாரத்துக்கு தாக்கம்
ஈரான் போர் உலக பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும். ஜப்பான் போன்ற தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி நாடுகள் முதலில் சிதைவடைவது மூலம் இந்த தாக்கம் உலகம் முழுவதும் தொடரும். இந்தியா போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளும் அழுத்தத்தை சந்திக்கும்.
மொத்தத்தில், ஈரான்-அமெரிக்கா மோதல் ஜப்பான் பொருளாதாரத்தை முதலில் அழிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதில் ஹார்முஸ் ஜலசந்தி மூடல் முதல்கட்ட ஆபத்தை உருவாக்கும் எனவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

ஈரான் இனி தலைதூக்கவே முடியாது; ஆட்சியிலும் ராணுவத்திலும் பிளவு - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

ஈரான் போரால் தலைதூக்கும் புது பிரச்சனை..!! இந்திய மக்களுக்கு அடுத்தடுத்த சிக்கல்..!!

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

ஈரான் போரில் அடுத்த திருப்பம்: ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து மெகா திட்டம் தீட்டும் ஈரான் அரசு..!!

துபாயில் ரம்ஜான் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு; ஈரான் போர் நீடிப்பதால் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications