இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது அணு ஆயுத திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க விரும்புவதாக அரபு நாடுகள் வழியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு செய்திகளை அனுப்பியுள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்தாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் தீவிர வான்வழித் தாக்குதலுக்கு மத்தியிலும், ஈரானின் அதிரடி மிரட்டலுக்கு மத்தியிலும், இரு நாடுகளுக்கும் மத்தியிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை நடத்த ஒரு வழியை உருவாக்கியுள்ளது ஈரான்.

ஈரானின் அவசர செய்தி: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் அச்சத்திற்கு மத்தியில் ஈரான், அரபு அதிகாரிகள் மூலம் தெரிவித்த செய்தியில், அமெரிக்கா இஸ்ரேலின் தாக்குதலில் பங்கேற்காத பட்சத்தில், அணு ஆயுத திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை வர தயாராக இருப்பதாக கூறியுள்ளது. மேலும், இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட செய்திகளில், இரு தரப்புக்கும் மோதல்களைக் கட்டுப்படுத்துவது பயனளிக்கும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.
இந்த செய்திகள், உலகளாவிய பதற்றத்தை குறைக்கும் முயற்சியாகவும், ஈரானின் அணு ஆயுத திட்டங்களைச் சுற்றிய நீண்டகால பிரச்சனையை தீர்க்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகின்றன.
தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்: இத்தகைய சூழ்நிலையிலும், இஸ்ரேலின் போர் விமானங்கள் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளில் எவ்வித தடையுமின்றி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. தெஹ்ரானில் இருக்கும் மக்கள் வடக்கு பகுதிக்கு குடியெயர துவங்கியுள்ளனர்.
இதனால், ஈரானின் கோரிக்கையை ஏற்பதற்கு பதிலாக இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தாமல் ஈரானின் அணு ஆயுத தளங்களை அழிப்பதற்கும், ஈரானின் நாட்டின் ஆட்சியை பலவீனப்படுத்துவதற்கும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஈரானின் பேச்சுவார்த்தை அழைப்பிற்கு இஸ்ரேல் எவ்விதமான பதிலையும் வெளியிடவில்லை.
ஈரானின் பேச்சுவார்த்தை அழைப்பு முதலீட்டு சந்தையில் புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 முதல் 3 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இதேபோல் தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 3415 டாலரில் இருந்து 3390 டாலர் வரையில் தடாலடியாக குறைந்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் இஸ்ரேலின் முடிவும், ஈரானின் பதில் தாக்குதல் தான் முதலீட்டு சந்தையின் போக்கை தீர்மானிக்கும்.


Click it and Unblock the Notifications