ஈரானில் நடைபெற்ற வரக்கூடிய போர் இந்திய மக்களை வெகுவாக பாதித்து இருக்கிறது. ஒருபுறம் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பயன்பாட்டுக்கும் சிலிண்டர் புக் செய்யும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரான் போர் நேரடியாகவும் மறைமுகமாகவும் கோடிக்கணக்கான இந்திய மக்களை பாதிக்க தொடங்கிவிட்டது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு சரக்கு போக்குவரத்து தடைபட்டதே இந்த நிலைக்கு காரணம். இந்த போர் நீடித்து கொண்டே இருப்பது இன்னும் பல சிக்கல்களை ஏற்படுத்த போகிறது.

அந்த வகையில் புதிய பிரச்சனை ஒன்று தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது. கூடிய விரைவில் குடியிருப்புகளின் விலை உயரப் போவதாக அனராக் நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இருப்பதன் காரணமாக சரக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது, இதனால் ஏராளமான கப்பல்கள் மாற்று வழிகளில் பயனிக்க வேண்டிய நிலை உள்ளது. இது கச்சா எண்ணெய்., எல்பிஜி ஆகியவை மட்டுமில்லாமல் பல்வேறு சரக்குகளின் போக்குவரத்தையும் தாமதப்படுத்தி இருக்கிறதாம்.
கட்டுமான பணிகளுக்கு தேவையான பல்வேறு சரக்குகள் போர் காரணமாக பல மைல் தூரம் சுற்றி இந்தியாவிற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறதாம். இதனால் ஒவ்வொரு கண்டெய்னர் சரக்கும் பல மடங்கு விலை உயர்ந்து வருவதாக அனராக் அறிக்கை கூறுகிறது. எனவே சரக்கு இறக்குமதி செலவு அதிகரித்து கட்டுமான செலவு அதிகரித்திருப்பதாக அனராக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் தாகூர் கூறுகிறார்.
குறிப்பாக ஸ்டீல் பொருட்களின் விலை 20% உயர்ந்து இருக்கிறதாம் அதாவது ஒரு டன் விலை 72000 ரூபாய் அதிகரித்துள்ளதாம். சிமெண்ட், டிம்பர் என ஒவ்வொன்றுக்கான மூல பொருட்களையும் இறக்குமதி செய்யும் விலை அதிகமாகி இருக்கிறதாம்.

குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் ஆடம்பர குடியிருப்புகளின் கட்டுமான செலவுகள் இதன் மூலம் அதிகரிக்கும் என கூறுகிறார். ஏனெனில் உயர் அடுக்குமாடி குடியிருப்புகளில் hot rolled coil கள் தான் அதிகம் தேவை. இதற்கான கட்டணமும் தற்போது 56 ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தை தொட்டுள்ளது. ஈரான் போர் நீடிக்கும் பட்சத்தில் இதன் விலை 60 ஆயிரம் ரூபாயை கடக்கும் என கூறுகிறார்.
அதே போல இத்தாலியின மார்பில்ஸ் இறக்குமதி செலவும் அதிகமாகி வருகிறது. கப்பல்கள் பாதுகாப்பு கருதி 10000 நாட்டில் மைல்கள் வரை சுற்றி கொண்டு இந்தியா வந்து சேர வேண்டும். அந்த செலவு இறுதியாக இது வீடு வாங்க கூடிய மக்களின் தலையில் தான் சுமத்தப்படும்.
போர் மற்றும் ஈரான் தாக்குதல் காரணமாக பஹ்ரைன் ,கத்தார் உள்ளிட்ட நாடுகளில் அலுமினியம் உற்பத்தி செய்யக்கூடிய ஆலைகள் மூடப்பட்டுவிட்டன இதனால் வேறு நாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக கட்டுமான பணிக்கான பொருட்களை சப்ளை செய்பவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே நிலைமை சீராகவில்லை என்றால் இந்திய மக்களின் புது வீடு வாங்கும் கனவும் காஸ்ட்லியானதாக மாற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications