மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர் காரணமாக இந்திய நிறுவனங்கள் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வில் இருந்து பெட்ரோகெமிக்கல் பொருட்கள், பிளாஸ்டிக், போக்குவரத்து கட்டணம், ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதி பொருட்கள் விலை உயர்வு என பல துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலவுகள் அதிகரித்துள்ளது.

இந்த திடீர் செலவுகளைச் சமாளிக்க நிறுவனங்கள் எப்போதும் இல்லாமல் அதிகளவில் கடன் வாங்கியுள்ளது என வங்கித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
8 மாதத்திற்கு முன்பு 75-80 டாலரில் வர்த்தகமான கச்சா எண்ணெய் விலை தற்போது 118 டாலருக்கு உயர்ந்துள்ளது, இதற்கிடையில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 97 ரூபாயை நெருங்கியது இது அனைத்தும் உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக மாறியது என்றால் மிகையில்லை.
குறிப்பாக நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களிடம் போதுமான நிதி இருப்பு இல்லாத காரணத்தால் இந்த திடீர் செலவுகளைச் சமாளிக்கச் செயல்பாட்டு மூலதனம் அதாவது நிறுவனம் தொடர்ந்து இயங்க working capital ஆக அதிகளவில் கடனாகப் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகளும், வங்கி தரப்பும் கூறுகையில் கடந்த 8 மாதங்களாக அதிகரித்து வரும் உற்பத்தி பொருட்கள் மற்றும் கடல்வழி போக்குவரத்து காலம் அதிகரித்த நிலையில் நிறுவனங்களால் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் கடன் வாங்கத் துவங்கியுள்ளது.
இதனால் working capital-க்கான தேவை 20 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது வெறும் கடனல்ல விலைவாசி உயர்வுக்கான அடித்தளம், எந்தொருளின் விலையும் அதன் உற்பத்தி விலை அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படும், அந்த வகையில் மத்திய கிழக்கு போர் காரணமாக உற்பத்தி செலவுகளை அதிகரிக்கும் போது, பொருளின் விலையும் அதிகரிக்கும். இதில் வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டியும் சேர்க்கப்படும் என்பது அதன் மறைமுக பொருள். இது நேரடியாக நாட்டின் பணவீக்கத்தை உயர்த்த வழிவகை செய்கிறது.
இந்திய வங்கிகளில் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான குறுகிய கால கடன் புத்தகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வங்கிகள் அடித்துக் கூறும் வேளையில், இதில் எந்த வங்கி அதிகளவில் நன்மை அடைந்துள்ளது தெரியுமா..?
ஆர்பிஎல் வங்கியின் கார்ப்ரேட் கடன் புத்தகம் 58 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி 34 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 30.6 சதவீதமும், கோட்டாக் மஹிந்திரா வங்கி 25 சதவீதமும், பெடரல் ரிசர்வ் வங்கி 17 சதவீதமும், ஹெச்டிஎப்சி வங்கி 16.4 சதவீதமும், இண்டஸ்இந்த் வங்கி 10 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications