ஈரான் போர் மூலம் செமிகண்டக்டர் துறைக்கு தற்போது பெரிய சவாலும், நெருக்கடியும் உருவாகியுள்ளது. குறிப்பார உலகளாவிய செமிகண்டக்டர் சிப் உற்பத்தியின் மையமாக உள்ள தைவான் மூலம் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க உள்ளது.
உலகளவில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் சிப்புகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை தைவானில் தயாரிக்கப்படுகின்றன. இந்த சிப்புகள் இல்லாமல் இன்று எந்த எலக்ட்ரானிக் பொருட்களும் செயல்பட முடியாது. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், கார்கள், தொழில்துறை இயந்திரங்கள் முதல் ஏஐ, கிளவுட் சேவைகள் வரையில் அனைத்தும் இந்த தைவான் நாட்டில் தயாரிக்கும் சிப்புகளை நம்பிதான் உள்ளது.

என்விடியா, ஆர்ம், ஸ்னாப்டிராகன் உட்பட பெரும்பாலான சிப்கள் தைவான் நாட்டில் தான் தயாரிக்கப்படுகிறது. ஒருப்பக்கம் இந்த குட்டி நாட்டை சீனா கைப்பற்ற முயற்சித்து வரும் வேளையில், ஈரான் போர் மூலம் தைவான் நாட்டின் உற்பத்தி துறையை சீர்குலைக்கும் வகையிலான நெருக்கடி உருவாகியுள்ளது.
LNG பற்றாக்குறை
தைவான் நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் முக்கிய ஆதாரங்களில் ஒன்று LNG (Liquefied Natural Gas). அந்நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியின் சுமார் 40 சதவீதம் LNG மூலம் நடைபெறுகிறது.
ஆனால் தற்போது தைவானில் LNG கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, அந்த நாட்டில் வெறும் 11 நாட்களுக்கு மட்டுமே போதுமான LNG இருப்பு உள்ளதாக தெரிகிறது. தைவான் பயன்படுத்தும் LNGயின் ஒரு பெரிய பகுதி கத்தார் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஈரான் ஹார்மூஸ் நீர்வழிபாதையை முடக்கியதால் தைவானுக்கான எல்என்ஜி விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மின்சார உற்பத்தி தடைபட்டால் தைவான் மக்கள் மட்டும் அல்லாமல் உற்பத்தி துறையும் கடுமையாக பாதிக்கப்படும்.
இந்த நிலையில், இப்பிரச்சனையை சரி செய்ய தைவான் தற்காலிகமாக மின்சார உற்பத்தியை நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் போன்ற மாற்று எரிசக்தி மூலம் உற்பத்தி செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து LNG வாங்கும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த மாற்றங்கள் உடனடியாக செய்ய வேண்டியதால் கூடுதல் செலவுகள் ஏற்படும். இதேபோல் வெறும் 11 நாட்களில் 40 சதவீத மின்சார உற்பத்தி இடைவெளியை சமன் செய்ய முடியுமா என்பது அடுத்த முக்கியமான கேள்வி. இந்த கேள்விக்கு விடை கிடைக்காவிட்டால் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு பாதிக்கப்படும்.
தைவான் அடுத்தக்கட்ட திட்டம்
செமிகண்டக்டர் சிப் உலக நாடுகளின் இயக்கத்திற்கு முக்கியம் தான், ஆனால் தைவானுக்கு அதைவிட முக்கியம் அந்நாட்டின் மக்கள். மின்சார் உற்பத்தி போதுமானதாக இல்லாத பட்சத்தில் மக்களுக்கான மின்சார தேவையை தான் முதலில் தைவான் அரசு பூர்த்தி செய்யும். இதன் காரணமாக உற்பத்தி துறை பாதிக்கப்படலாம்.
அப்படி பாதிக்கப்பட்டால் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு காட்டாயம் சில நாட்களுக்கு தடைபட வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஏஐ, கிளவுட் சேவை காரணமாக சந்தையில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் வேளையில் சப்ளை செய்ய முடியாத நிலை உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் மின்சாரம் தடைப்பட்டால் மொத்த உற்பத்தியும் பாதித்து விலை தாறுமாறாக உயரும். இதனால் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், கார்கள், தொழில்துறை இயந்திரங்கள் என அனைத்தும் விலை உயரும்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய புது சலுகை: விமான டிக்கெட் விலை குறையுமா?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

கிடுகிடுவென உயரும் விமான டிக்கெட் கட்டணங்கள்: ஈரான் போர் தான் காரணமா?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications