உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் போர் சூழ்நிலை காரணமாக இந்தியாவில் ஏற்கனவே எரிபொருள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சனைகள் இருக்கும் வேளையில் புதிய பிரச்சனையாக பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் விலை திடீரென அதிகரித்து மூலம் வருகிறது. பிளாஸ்டிக் தானே, நமக்கு என்ன தொடர்பு என்று நினைக்க வேண்டாம், நீங்கள் நினைப்பதை தாண்டி பெரிய பாதிப்பு ஏற்படும் சக்தி பிளாஸ்டிக் பொருட்களுக்கு உள்ளது.
கடந்த சில வாரங்களில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட தாக்கம் தான் பிளாஸ்டிக் விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. இந்திய பிளாஸ்டிக் சந்தையில் இதுவரை காணாத அளவுக்கு தடாலடியாக விலை உயர்வு பதிவாகியுள்ளது.

குறிப்பாக பாலிஎதிலீன் (Polyethylene) உள்ளிட்ட முக்கிய பாலிமர் பொருட்களின் விலை இரட்டிப்பாக உயர்ந்ததால், மக்களின் தினசரி பயன்பாட்டு பொருட்கள் முதல் மருத்துவ உபகரணங்கள், கட்டுமான பொருட்கள், கார் உற்பத்தி வரை பல துறைகளில் நேரடி தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களில் இரட்டிப்பு:
இந்தியாவில் பிளாஸ்டிக் உற்பத்திக்கான முக்கிய மூலப்பொருளான பாலிஎதிலீன் விலை கடந்த இரண்டு வாரங்களுக்குள் கிலோவுக்கு ரூ.80 இருந்து ரூ.160 ஆக உயர்ந்துள்ளது. குறுகிய காலத்தில் ஏற்பட்ட இந்த இரட்டிப்பு உயர்வு, பிளாஸ்டிக் சார்ந்த அனைத்து உற்பத்தித் துறைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, பாட்டில் தண்ணீர், உணவு பொருட்களின் பேக்கேஜிங், PVC குழாய்கள், மருத்துவ சிரிஞ்சுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது. இதனால் இந்தப் பொருட்களின் சந்தை விலையும் ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளது.
சர்வதே சந்தை தாக்கம்
இத்தகைய விலை உயர்வு இந்தியாவில் மட்டும் இல்லை உலக சந்தையிலும் இதே போன்று விலை உயர்வு காணப்படுகிறது. சீனாவின் DCE (Dalian Commodity Exchange) பரிவர்த்தனை சந்தையில் கடந்த ஒரு மாதத்தில் பாலிப்ரோபிலீன் (Polypropylene) விலை சுமார் 30% உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பாலிமர் விலை மாற்றங்கள்
குஜராத் மாநில பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவலின்படி, பல்வேறு பாலிமர் வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.18 முதல் ரூ.32 வரை உயர்ந்துள்ளது.
மேலும், இந்திய எண்ணெய் கழகம் (IOCL) மார்ச் 1, 2026 முதல் பாலிப்ரோபிலீன் விலையை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2,000 உயர்த்தியது. அதேபோல் LLDPE மற்றும் HDPE வகை பாலிஎதிலீன் பொருட்களின் விலை ரூ.2,500 உயர்த்தப்பட்டது.
இதற்கு இணையாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) மற்றும் OPAL நிறுவனங்களும் மார்ச் 11 முதல் பிளாஸ்டிக் பாலிமர் விலைகளை உயர்த்தியுள்ளன. இந்த நடவடிக்கைகள் உள்நாட்டு சந்தையில் விலை அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளன.
மக்களுக்கு என்ன பாதிப்பு
பிளாஸ்டிக் மூலப்பொருள் விலை உயர்வு, பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் பல பொருட்களின் விலையையும் நேரடியாக தொடர்புடையது.
காலையில் எழுந்து பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ் முதல் இரவு தூக்கும் போது படுக்கையில் போர்த்திக்கொள்ளும் போர்வை வரையில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளது. இந்த நிலையில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களின் விலையில் பிளாஸ்டிக் விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும். உற்பத்தியில் எல்பிஜி விலை, போக்குவரத்துல் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் விலை தாக்கத்தை ஏற்படுத்தும்.
உதாரணமாக பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் மூடிகள்களின் விலை ஏற்கனவே சுமார் 50% வரை உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பாட்டில் குடிநீர் உற்பத்தியாளர்கள் ஒரு பாட்டிலுக்கு குறைந்தபட்சம் ரூ.1 வரை விலை உயர்த்தியுள்ளனர்.
FMCG துறையில் ஸ்நாக்ஸ், ஷாம்பு, சோப்பு போன்ற சிறிய சாசே பேக்கேஜிங் பொருட்களின் மொத்த உற்பத்தி செலவில் 5% முதல் 15% வரை பேக்கேஜிங் செலவு இருக்கும். ஆனால் தற்போது பேக்கேஜிங் செலவு ஏற்கனவே 20% வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிறுவனங்கள் விலையை உயர்த்துவது அல்லது பொருளின் அளவை குறைப்பது போன்ற முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.
வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மருத்துவ துறை
வீட்டில் பயன்படும் பிளாஸ்டிக் பக்கெட் போன்ற பொருட்களின் விலை சுமார் 20% வரை உயர்ந்துள்ளது. அதேபோல் மருத்துவ துறையில் சிரிஞ்சுகள், IV பைகள் போன்ற மருத்துவ உபகரணங்களின் விலை சுமார் 30% வரை அதிகரித்துள்ளது.
இதனால் மருத்துவ சேவைகளின் செலவிலும் மறைமுகமான கட்டண உயர்வு ஏற்படும் அபாயம் உள்ளது.
கட்டுமானம் மற்றும் கார் துறை
கட்டுமானத் துறையிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பங்கு மிகவும் அதிகம், தற்போதைய விலை உயர்வு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக PVC குழாய்கள், பிளாஸ்டிக் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் பானல்கள் போன்ற பொருட்களின் விலை சுமார் 30% வரை உயர்ந்துள்ளது. இது கட்டுமான செலவை பெரிய அளவில் அதிகரிக்கும்.
மேலும் கார் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்களில் சுமார் 30% பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் இருக்கும் காரணத்தால் இதன் விலையும் உயர உள்ளது. இவை அனைத்தும் விலை உயர்வால் பாதிக்கப்படுவதால், எதிர்காலத்தில் கார் உற்பத்தி செலவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
3-9 மாதங்கள் காலம்
சந்தை நிபுணர்கள் கூறுவதன்படி, இந்த விலை உயர்வு குறைந்தது 3 முதல் 9 மாதங்கள் வரை தொடரும் வாய்ப்பு உள்ளது. உலகளாவிய சப்ளை சங்கிலி சீராகும் வரை பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் விலை பாதிப்பு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வீடு புதுப்பிப்பு, கட்டுமானம் போன்ற பெரிய செலவுகளை திட்டமிட்டுள்ளவர்கள் அடுத்த சில மாதங்கள் காத்திருக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய புது சலுகை: விமான டிக்கெட் விலை குறையுமா?

கிடுகிடுவென உயரும் விமான டிக்கெட் கட்டணங்கள்: ஈரான் போர் தான் காரணமா?



Click it and Unblock the Notifications