ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் தொடங்கிய போர் 10 நாட்களுக்கும் மேலாக நீடிக்கிறது. மேற்காசியாவில் நீடிக்கும் பதற்றம் இந்தியாவில் கடுமையாக எதிரொலிக்க தொடங்கிவிட்டது.
மேற்காசியா போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் மற்றும் எரிபொருள்கள் விநியோகம் ஒரு வாரத்திற்கு மேலாக தடைப்பட்டு இருக்கிறது. உலக சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இது இந்திய சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவுக்கு தேவையான பெரும்பாலான கச்சா எண்ணெய் வளைகுடாவில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் கொண்டு வரப்பட வேண்டும்.

ஆனால் பத்து நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்த கப்பலும் இயக்கப்படவில்லை. அதாவது இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் கொண்டு வரப்படவில்லை. இதன் காரணமாக இந்தியாவை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் முதல் கட்டமாக சிலிண்டர் விநியோகத்தில் கைவைத்துள்ளன. திடீரென வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை பெருமளவில் குறைத்து இருக்கின்றன. இது இந்தியாவில் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டு விட்டன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலை உண்டாகியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோக நிறுவனங்கள் தங்களுடைய எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை பெருமளவில் குறைத்து இருக்கின்றன. குறிப்பாக வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்தி வைத்திருக்கின்றன. இதனால் பெங்களூரு சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஹோட்டல்கள் அனைத்து மூடப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
சென்னை ஹோட்டல்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது சிலிண்டர் வினியோகம் செய்யக்கூடிய நிறுவனங்கள் ஹோட்டல்களுக்கு எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தையே முற்றிலுமாக நிறுத்தி வைத்திருக்கின்றன என கூறியுள்ளது. எங்களிடம் சுத்தமாக இருப்பு இல்லை என தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பல்வேறு உணவகங்களையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்னை ஹோட்டல்கள் சங்கத்தினர் இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதி இருக்கின்றனர். அதில் உணவகங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் விநியோகம் தடைப்படும் போது மருத்துவமனைகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் கல்லூரி விடுதிகள், ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவு விநியோகம் பாதிக்கப்படுகிறது, அது மட்டும் இன்றி பல்வேறு ஹோட்டல்களிலும் திருமணம், பிறந்தநாள் விழா கொண்டாட்டம் உள்ளிட்டவற்றுக்காக ஏராளமானவர்கள் ஹால்களை முன்பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே பெருமளவில் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே மத்திய அரசு வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டரை அத்தியாவசிய பொருள் என்ற அடிப்படையின் கீழ் உணவகங்களுக்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். வணிக ரீதியிலான எல்பிஜி விநியோகம் நிறுத்தப்பட்டிருக்க கூடிய சூழலில் வீடுகளில் பயன்படுத்தப்படக்கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர்களின் டெலிவரியும் நிறுத்தப்படுமா என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
எப்போது வேண்டுமானாலும் கட்டுப்பாடு அதிகரிக்கலாம் என்பதால் ஏராளமானவர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு தேவையான சிலிண்டர்களை பதிவு செய்ய தொடங்கியிருக்கின்றனர். இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூரு நகரத்திலும் பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கும் வணிக சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இது ஹோட்டல் நடத்தி வரும் பலருக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. இது தொடர்பாக பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டிருப்பதால் சாதாரண மக்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள் என ஹோட்டல்களை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெங்களூர் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. பெங்களூரு மட்டுமல்ல நாட்டின் மும்பை உள்பட பல்வேறு நகரங்களிலும் இதே நிலைமைதான் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அடுத்த 70 நாட்களுக்கு காஸ் நின்ற விநியோகத்தில் தட்டுப்பாடு இருக்காது என மத்திய அரசு கூறியது ஆனால் டீலர்கள் உணவகங்களுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யாமல் நிறுத்தி வைத்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கின்றனர்.
ஹோட்டல் தொழிலுக்கு இது பெரிய இடியாக அமைந்துள்ளது என்றும் மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும் என்றும் வணிக சிலிண்டர் விநியோகத்தை மீண்டும் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஹோட்டல்கள் மூடப்படுவது அவற்றை நம்பி வேலை செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் பாதிக்க செய்துள்ளது.
More From GoodReturns

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது இந்திய ரூபாய் மதிப்பு!! ஈரான் போர் பதற்றத்தால் இந்தியாவுக்கு புது சிக்கல்!!

ஈரான் போர்: வான்வெளியில் மட்டுமல்ல நீருக்கடியிலும் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா!!

ஈரான் போர்: மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அரசு முக்கிய உத்தரவு!!

உக்கிரமடையும் ஈரான் போர்: தங்கம், வெள்ளி விலை எவ்வளவு வரை உயரும்? இப்போது நகை வாங்கலாமா வேண்டாமா?



Click it and Unblock the Notifications

