வளைகுடா பகுதிகளில் நடைபெற்று வரும் ஈரான் போர் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு தீனி போட்டது போல் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்த போர் என்னவோ 3 நாடுகளுக்கு மத்தியில் தான் ஆனால் Strait of Hormuz என்ற பாதை ஈரான் கட்டுப்பாட்டுக்கு சென்ற காரணத்தால் வளைகுடா நாடுகளில் இருந்து வெளியேறும் கச்சா எண்ணெய், எரிவாயு மொத்தமாக தடைப்பட்டு உள்ளது.
இதனால் உலகளவில் லாக்டவுன் வரும் என பேச்சுக்கள் அடிப்பட துவங்கியுள்ளன. இதற்கு ஏற்றார் போல் பிரதமர் மோடி நேற்று நாடாளுமன்றத்தில் பேசும் போதும் லாக்டவுன் குறித்து பேசினார். இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர், பலர் சிலிண்டர் புக் செய்யவும், கேஸ் கடைகள் முன்பு காலி சிலிண்டர் உடன் காத்திருப்பதும், பெட்ரோல் பங்க்-களில் நீண்ட வரிசையில் கார்களும் பைக்களும் நிற்பது என காட்சிகள் இப்போதே காண துவங்கியுள்ளோம்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசியபோது, உலகளாவிய நெருக்கடிகளின் சுமையை விவசாயிகள் மீது தங்கள் அரசு ஒருபோதும் சுமத்தவில்லை என தெரிவித்தார். தற்போதைய ஈரான் போர் சூழ்நிலை நீண்ட காலம் நீடிக்கக்கூடும் என்பதால், நாடு ஒன்றுபட்டு தயாராக இருக்க வேண்டும் என்றும், COVID காலத்தில் காட்டிய ஒற்றுமையை மீண்டும் கடைபிடிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநிறுத்த உரையாடல் மற்றும் தூதரக முயற்சிகளே ஒரே தீர்வாக இந்தியா நம்புகிறது என்றும், ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து தரப்புகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். நேற்றும் பிரதமர் மோடி டிரம்ப் உடன் தொலைப்பேசியில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இண்டர்நெட் டமாள்..
இதன் எதிரொலியாக 'India Lockdown again' மற்றும் 'Lockdown news' போன்ற தேடல்கள் இணையத்தில் அதிகரித்துள்ளன. COVID-19 லாக்டவுன் அச்சம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொதுமக்களிடம் உருவாகியுள்ளது. இதேவேளையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவுற்றது.
Strait of Hormuz வழியாக எரிசக்தி சப்ளை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் சாத்தியம் இல்லாததால், உலகளாவிய எரிசக்தி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய் இல்லாமலேயே வீட்டி மக்கள் முடங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகும் அச்சம் தற்போது மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
ஆசிய நாடுகள்
இந்தியா, தென் கொரியா, வங்காளதேசம், வியட்நாம் போன்ற எரிபொருள் இறக்குமதி சார்ந்த நாடுகளின் கையிருப்புகள் சில வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளன. குறைந்த சப்ளை காரணமாக, தொழிற்துறை உற்பத்தி முதல் அன்றாட வாழ்க்கை வரை அனைத்து துறைகளும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
முதல் உலகளாவிய எச்சரிக்கை
இந்த நிலையில் International Energy Agency (IEA) உலகம் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது என்று எச்சரித்துள்ளது. தினசரி 11 மில்லியன் பேரல்கள் அளவுக்கு எண்ணெய் விநியோகம் குறைவது, 1970களின் எண்ணெய் நெருக்கடிகளையும் விட அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய நடவடிக்கைகள்
இந்த எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க IEA பரிந்துரைத்துள்ள முக்கிய ஆலோசனைகள் பட்டியலில், ஊழியர்களுக்கு Work From Home, வாகன வேகத்தை குறைத்தல், எரிவாயு பயன்பாட்டை குறைத்தல், பொது விடுமுறை அதிகரிப்பது, பெட்ரோல் - டீசல் கொள்முதல் அளவை குறைப்பது போன்றவை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதனை பல நாடுகள் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன.
உலக நாடுகள் அவரச நடவடிக்கை
இலங்கை கல்வி மற்றும் அரசு துறைகளுக்கு கட்டாய விடுமுறைகள் அறிவித்துள்ளது. வங்காளதேசம் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தினசரி மின்தடை அட்டவணையை அறிமுகப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகியவை 4 நாள் மட்டுமே வேலை முறையை கொண்டு வந்துள்ளன. வியட்நாம் நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது.
எண்ணெய் விலை 40% உயர்வு
போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் கச்சா எண்ணெய் விலை 40% மேல் உயர்ந்து, 2022க்கு பிறகு இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. சந்தை நிபுணர்கள் கணிப்பில், ஒரு பேரல் எண்ணெய் விலை $125 முதல் $150 வரை உயரும் அபாயம் உள்ளது.
Brent எண்ணெய் விலை $90 அளவில் இருந்தாலும், உலகளாவிய பணவீக்கம் அதிகரித்து வளர்ச்சி 2% வரை குறையலாம். $125-ஐ எட்டினால் உலக பொருளாதாரம் மந்தநிலை (Recession) நோக்கி செல்லும் அபாயம் உள்ளது.
மேலும் டிரம்ப் ஈரான் உடன் பேசி விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளார், ஆனால் ஈரான் தொடர்ப்பில் தொடர்ந்து எத்தகைய பேச்சுவார்த்தையும் செய்யவில்லை என தெரிவித்துள்ளது.
தற்காலிக தீர்வுகள் போதாது
Strategic Petroleum Reserves (SPR) மூலம் 400 மில்லியன் பேரல்கள் வெளியிடப்பட்டாலும், சவுதி அரேபியா உற்பத்தியை அதிகரித்தாலும், சந்தையில் தேவைக்கு போதுமான சப்ளை இல்லை. மாற்று வழிகள் குறைவாக உள்ளதால், லாக்டவுன் போன்ற நடவடிக்கைகள் தான் தற்காலிக நிவாரணமாக மட்டுமே இருக்கும் என International Energy Agency தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எரிசக்தி கையிருப்பு
இந்தியா தற்போது மூன்று நிலத்தடி சேமிப்பு மையங்களில் 5.33 மில்லியன் டன் கொள்ளளவு கொண்டுள்ளது. ஆனால் இதில் 3.37 மில்லியன் டன் மட்டுமே உள்ளது, இது சுமார் 5 நாட்களுக்கு மட்டுமே போதுமானது.
முழு கொள்ளளவு இருந்தாலும், இது 9.5 நாட்கள் தேவைக்கு மட்டுமே போதுமானது. IEA பரிந்துரைக்கும் 90 நாள் கையிருப்பு அளவுக்கு இந்தியா மிகவும் கீழே உள்ளது. இந்தியா தனது சேவையில் 80% மேல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், இந்த குறைபாடு மிகப்பெரிய அபாயமாக பார்க்கப்படுகிறது.
2021-ல் மத்திய அரசு ஒடிஷா, கர்நாடகா, பிகானேர், ராஜ்கோட் போன்ற இடங்களில் கூடுதல் கையிருப்பு அமைப்புகள் அமைக்க திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
உலக நாடுகள்
அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் என்பதால், எந்த கச்சா எண்ணெய் பிரச்சனை ஆனாலும் எளிதில் சமாளிக்கிறது. ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள் 1970களிலேயே கையிருப்புகளை அதிகரித்து, இத்தகைய நெருக்கடிகளை எதிர்கொள்ள தயாராக உள்ளன.
ஈரான் போர் இந்தியாவுக்கு ஒரு முக்கிய பாடமாக உள்ளது. எரிசக்தி பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பிற்கு சமமானது. எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஏற்படும் எந்த மாற்றமும் இந்திய பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கிறது.
எனவே, நீண்டகால கையிருப்பு உருவாக்கம் மற்றும் மாற்று எரிசக்தி முதலீடுகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய புது சலுகை: விமான டிக்கெட் விலை குறையுமா?

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!



Click it and Unblock the Notifications