பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய ஈரான் போர் மூன்றாவது வாரமாக நீடிக்கிறது. ஈரான் மீது திடீரென அமெரிக்காவும் இஸ்ரேல் ராணுவமும் இணைந்து கூட்டு ராணுவ தாக்குதலை தொடங்கின. பதிலுக்கு ஈரான் இஸ்ரேல் நாட்டின் மீதும் தங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய ஐக்கிய அரபு அமீரகம் , சவுதி உள்ளிட்ட நாடுகளில் இருக்கக்கூடிய கட்டமைப்புகள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகிறது.
வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசிப்பதால் அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வசிக்கும் நாடுகளின் அரசுகள் வெளியிடக்கூடிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசும், இந்திய தூதரகமும் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வந்தது. ஐக்கிய அரபு அமீரக அரசு ஈரான் தாக்குதல் தொடர்பான போலியான தகவல்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் துபாய், அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் அவற்றை பகிர்வதை நிறுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்படும் வகையிலும் இது போன்ற போலியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என ஐக்கிய அரபு அமீரக அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த சூழலில் ஈரான் போர் தொடர்பாக போலியான தகவல்களை பகிர்ந்துகளாக 19 இந்தியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரக அரசின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான, வாம் வெளியிட்டுள்ள தகவலின் படி ஈரான் போர் தொடர்பாக போலியான மற்றும் புனையப்பட்ட தகவல்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பரப்பியதாக 35 நபர்களை கைது செய்வதற்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த 35 பேரில் 25 பேர் வெளிநாட்டவர்கள் அதிலும் 17 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அரசின் அட்டார்னி ஜெனரல் ஹமாத் சயிஃப் அல் ஷாம், அரசு டிஜிட்டல் தளங்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது, போலியான தகவல்கள் , மக்களிடையே பதற்றம் உண்டாக்கக்கூடிய தகவல்கள் , நாட்டின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் மற்றும் பாதுகாப்புக்கு அச்சூறுத்தல் ஏற்படுத்தும் வீடியோக்கள், படங்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தோம் அப்படி இருந்தும் போலியான தகவல்களை பரப்பியவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
போர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது , ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஈரான் ஏவக்கூடிய குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை ஐக்கிய அமீரக அரசு தன்னுடைய வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் வானிலேயே தடுத்து வீழ்த்துகிறது. இதனை வீடியோ, புகைப்படம் எடுத்து பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற வீடியோக்கள் மற்றும் படங்கள் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட முக்கியமான தகவல்களை வெளி உலகத்திற்கு காட்டுகின்றன என ஐக்கிய அரபு அமீரக அரசு குற்றம் சாட்டுகிறது. வெளிநாடுகளில் நடந்த தாக்குதல் வீடியோக்களை துபாயில் நடந்ததாக போலியாக பகிர்ந்தவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மக்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் ஓராண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் aed அபராதமும் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications