ஈரான் நாட்டில் நிகழக்கூடிய போர் உலக கச்சா எண்ணெய் சந்தையையே புரட்டிப் போட்டிருக்கிறது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு இந்தியா. ஏனெனில் இந்தியாவுக்கும் ஈரான் கச்சா எண்ணெய்க்குமான தொடர்பு அப்படி.
இந்தியா தனக்கான 90%க்கும் மேலான கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் தான் வாங்கி சுத்திகரித்து பெட்ரோல், டீசலாக மாற்றி பயன்படுத்துகிறது. அந்த வகையில் உலக சந்தையில் கிடைக்கும் கச்சா எண்ணெய் அனைத்துமே ஒரே மாதிரி இருக்காது. இதனால் தான் பிரெண்ட் கச்சா எண்ணெய், WTI கச்சா எண்ணெய் என பல வார்த்தைகளால் குறிப்பிடுகிறோம். பொதுவாக இவற்றை ஸ்வீட்(sweet) கச்சா எண்ணெய், சோர் (sour) கச்சா எண்ணெய் என அழைக்கிறார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை இந்த இரண்டு வகையான கச்சா எண்ணெய்களையும் வாங்கி ஒரு குறிப்பிட்ட கலவையில் கலந்து தான் பெட்ரோல், டீசல் ஆக மாற்றி பயன்படுத்துகிறது. இந்தியாவில் இருக்க கூடிய எண்ணெய் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சோர் கச்சா எண்ணையை சுத்திகரிப்பு செய்யவே உருவாக்கப்பட்டவை. அவற்றில் அதிக சல்பர் கொண்ட ஸ்வீட் கச்சா எண்ணெயை நேரடியாக சுத்திகரிக்க முடியாது. இதனால் தான் நாம் இரண்டு கச்சா எண்ணையும் வாங்கி அதில் 79 % சோர் கச்சா எண்ணையும் 21% ஸ்வீட் கச்சா எண்ணெய்யும் கலக்கிறோம். இதனை தான் இந்தியன் ஆயில் பேஸ்கட் என அழைக்கிறார்கள்.
மத்திய பெட்ரோலிய அமைச்சகமே இதனை மேற்பார்வையிட்டு இந்திய பேஸ்கட்டிற்கான கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில் ஈரானில் கிடைக்கக்கூடிய கச்சா எண்ணெய் இந்த இரண்டு கலந்த கலவையாகவே இருக்கும், அதாவது மற்ற நாடுகளில் கச்சா எண்ணெய் வாங்கினால் அது சோர் அல்லது ஸ்வீட் வகையா என பார்த்து சரியான விகிதத்தில் நாம் கலந்து பயன்படுத்த வேண்டும். ஈரான் எண்ணெயில் அந்த பிரச்சினை இல்லை. அதனை வாங்கி அப்படியே நேரடியாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பி விடலாம்.

இதனால் தான் இந்தியா ஈரான் கச்சா எண்ணெய்க்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. ஈரான் எண்ணெய் வாங்கி சுத்திகரிப்பு ஈஸி மற்றும் செலவு குறைவானது. தற்போது அது தடைபட்டுள்ளது. எனவே வெளிச்சந்தையில் பிரெண்ட் கச்சா மற்றும் பிற வகை கச்சா எண்ணெய்களை வாங்கி கலந்து சுத்திகரிப்பு செய்து தான் நாம் பயன்படுத்த வேண்டும். இது அதிக பிராசஸ் கொண்டது அதிக செலவும், கொண்டது. போருக்கு முன்பு வரை ஒரு பேரல் சுமார் 90 டாலருக்கு கிடைத்த நிலையில் இந்தியா தற்போது 160 டாலருக்கு ஒரு பேரலை வாங்குகிறது.
மத்திய அரசின் பெட்ரோலியம் பிளானிங் அண்ட் அனலிசிஸ் செல் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல் படி மார்ச் மாதம் முழுவதும் வாங்கப்பட்ட ஸ்வீட் மற்றும் சோர் கச்சா எண்ணெய்களின் சராசரி விலை ஒரு பேரல் 117.09 டாலராகும்.
மார்ச் 19ஆம் தேதி வாங்கப்பட்ட கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 156.29 டாலராகும்.

தற்போது நிலைமை என்னவென்றால் 90 டாலருக்கு கச்சா எண்ணெய் வாங்கும் போது எவ்வளவு விலைக்கு பெட்ரோல், டீசலை விற்பனை செய்தனவோ தற்போதும் அதே விலைக்கு தான் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. அண்மையில் தான் பிரீமியம் பெட்ரோல் விலை மட்டுமே 2 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டது சாதாரண பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் இந்தியாவை சேர்ந்த இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையிலும் 20 ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது.
ஒவ்வொரு நாளும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்திற்கு தான் பெட்ரோல், டீசலை விற்பனை செய்கின்றன. இந்த நிலைமை விரைவில் சீரடையாவிட்டால் எண்ணெய் நிறுவனங்கள் அடுத்ததாக பெட்ரோல் விலைகளை உயர்த்தி நஷ்டத்தை மக்கள் மீது சுமத்த வாய்ப்புள்ளது. தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை உயராது என மத்திய அரசு கூறுகிறது, இருந்தாலும் எண்ணெய் நிறுவனங்கள் எத்தனை காலத்திற்கு இந்த நஷ்டத்தை ஈடு கட்டும் என தெரியாது. போர் முடிந்து ஈரான் கச்சா எண்ணெய் நமக்கு கிடைக்கும் வரை கயிறு மேல் நடப்பது போன்ற ஒரு நிலை தான் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு இருக்கிறது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

தொடர்கிறது ஈரான் போர்!! நாளை காலை 10 மணிக்கு தரமான சம்பவம் காத்திருக்கிறது என அறிவித்த டிரம்ப்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

பெட்ரோல் விலை ரூ.119, டீசல் விலை ரூ.127..!! இந்த மாத கடைசியில் அதிர்ச்சி காத்திருக்கு மக்களே!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!



Click it and Unblock the Notifications