அமெரிக்காவில் இஸ்லாமிய மாநிலம்.. டிரம்ப்-ஐ வம்புக்கு இழக்கும் ஈரான்.. கலிபோர்னியாவை இனி மறந்திடுங்க!

அமெரிக்கா - ஈரான் மத்தியில் போர் தாக்குதல் இல்லாவிட்டாலும், இரு நாடுகள் மத்தியில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2 வாரங்களாக ஹார்முஸ் நீரிணையை முழுவதையும் கைப்பற்றுவது குறித்து பேசி வரும் வேளையில் நேற்று தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஹார்முஸ்-ஐ அமெரிக்காவில் புதிய பகுதி என அறிவித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

இதற்கு கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்ட டிரம்புக்கு ஈரான் சரியான பதிலடி கொடுத்துள்ளது. ஹைதரபாத்தில் இருக்கும் ஈரான் நாட்டின் துதரகத்தின் டிவிட்டர் பக்கத்தில் கலிப்போர்னியாவை இஸ்லாமிய குடியரசு நாடான ஈரானின் புதிய பகுதி என அறிவித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் இஸ்லாமிய மாநிலம்.. டிரம்ப்-ஐ வம்புக்கு இழக்கும் ஈரான்.. கலிபோர்னியாவை இனி மறந்திடுங்க!

இந்த பதிவு வெளியாகி 24 மணிநேரத்தில் சுமார் 1 லட்சம் பேகுக்கு அதிகமான நபர்கள் கண்டுள்ளனர். டிரம்ப்-ன் புகைப்படத்திற்கு பதலடியாக இப்புகைப்படம் பகிரப்பட்டாலும், இரு நாடுகளும் மற்ற நாடுகள் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை.

ஆனால் டிரம்ப் பல முறை ஈரானில் ராணுவ வீரர்கள் கொண்டு நிலத்தில் இறங்கி தாக்கி அந்நாட்டை கைப்பற்றும் திட்டம் இருப்பதாக கூறி வருகிறார். இதற்கு பதில் கொடுக்கும் வகையில் அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது பினை கைதிகளாக பிடித்து ராணுவத்திடம் ஒப்படைத்தாலோ 5 பில்லியன் ஈரான் தோமான் பரிசாக அளிக்க உள்ளதாக ஈரான் ராணுவத்தின் தலைவர் அமீர் ஹாடாமி தெரிவித்துள்ளார்.

Also Read

இதுவே பெண்கள் அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றால் பரிசு தொகை இரட்டிப்பாக அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஆனால் இதுவரையில் அமெரிக்கா ராணுவம் ஈரான் நாட்டிற்குள் நுழைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

டிரம்ப் எப்படி கிரீன்லாந்து நாட்டையும், வெனிசுலா நாட்டையும் அமெரிக்க பகுதிகளாக அறிவித்து பரபரப்பை கிளப்பினாரோ, அதேபோல் தற்போது ஹார்முஸ் நீரிணையை புதிய அமெரிக்க பகுதியாக அறிவித்து போட்டோவை வெளியிட்டு உள்ளார்.

Recommended For You

ஹார்முஸ்-ஐ அமெரிக்கா தனது கடற்படை முடக்கம் மூலம் கட்டுப்படுத்தி வருகிறது. இதன் நீட்சியாக மொத்த நீரிணையை நாம் கன்ட்ரோலில் எடுப்பது எளிது என்றும், இது நல்ல ஐடியா என்றும் நேற்று தெரிவித்தார். ஆனால் டிரம்ப்-ன் இந்த புகைப்படத்திற்கு ஈரான் அரசின் உயர்மட்ட அதிகாரிகள் இதுவரையில் எவ்விதமான கருத்தையும் முன்வைக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+